சென்னை: தமிழ்நாட்டில் 19 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுவதாக சட்டமன்ற பேரவையில் அமைச்சர் நேரு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. 23ந்தேதி முதல் சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை விவாதங்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நகராட்சி நிர்வாகம் துறை சார்பில் அமைச்சர் கே.என்.நேரு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, தாம்பரம், கரூர், கும்பகோணம், காஞ்சிபுரம், கடலூர், சிவகாசி ஆகிய 5 நகரங்கள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
தொடர்ந்து,
- பள்ளப்பட்டி,
- திட்டக்குடி,
- மாங்காடு,
- குன்றத்தூர்,
- நந்திவரம்,
- கூடுவாஞ்சேரி,
- பொன்னேரி,
- திருநின்றவூர்,
- சோழிங்கர்,
- தாராமங்கலம்,
- திருமுருகன் பூண்டி,
- கூடலூர்,
- காரமடை,
- கருமத்தம்பட்டி,
- மதுக்கரை,
- வடலூர்,
- கோட்டக்குப்பம் உள்பட 19 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்படும் என அறிவித்து உள்ளார்.