அகமதாபாத் :

மெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வரும் பிப்ரவரி 24 ம் தேதி இரண்டு நாள் அரசுமுறை பயணமாக முதல்முறையாக  இந்தியா வருகிறார்.

பிப்ரவரி 24ந் தேதி நேரடியாக அகமதாபாத் விமானநிலையம் வந்தடையும் அதிபர் டிரம்ப்-பை பிரதமர் மோடி வரவேற்கிறார்.

பின்னர் அங்கிருந்து மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்திற்கு செல்லும் டிரம்ப், ஆசிரமத்தை சுற்றிபார்ப்பதோடு அங்குள்ள காந்தியின் இல்லமான ‘ஹிருதயா குஞ்ச்’ உள்ளிட்ட இடங்களை பார்வையிடுவதோடு அங்கு இருக்கும் ராட்டையையும் சுற்றுகின்றனர், டிரம்ப் மற்றும் அவரது துணைவி மெலனியா டிரம்ப்-வுடன் பிரதமர் மோடி சுற்றிக்காண்பிக்கிறார்.

இதனை தொடர்ந்து, 1.10 லட்சம் பேர் அமரக்கூடிய, உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான சர்தார் வல்லபாய் படேல் மைதானத்தை தொடங்கி வைக்கிறார்.

அதே, ஸ்டேடியத்தில் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் இருவருக்கும் லட்சக்கணக்கானோர் முன்னிலையில் மிகப்பிரமாண்ட வரவேற்பு நிகழ்ச்சி “கெம் ச்சோ டிரம்ப்” எனும் தலைப்பில் மோடி-டிரம்ப் நட்பை குறிக்கும் விதமாக நடக்கிறது.

கடந்த செப்டெம்பரில் அமெரிக்க பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு 50,000 முன்னிலையில் “ஹவ்டீ மோடி” எனும் வரவேற்பு நிகழ்ச்சி இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது. “கெம் ச்சோ டிரம்ப்” குஜராத்தி மொழியில் “கெம் ச்சோ” என்பதற்கு “நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்” என்பதாகும்.

இந்த நிகழ்ச்சிக்கு 1.25 லட்சம் பார்வையாளர்களை அழைத்துவரும் பொறுப்பை குஜராத் அரசிடம் விட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 1.10 பேர் அமரக்கூடிய பார்வையாளர் பகுதியில், மீதம் உள்ள 15000 பேர் திடலில் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

24ம் தேதி மாலையில் நடக்கும் இந்த பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, சபர்மதி ஆசிரமம் செல்லும்போது, “வைஷ்ணவ ஜனதோ” எனும் பாடல் இசைக்கப்படும்.

அமெரிக்க அதிபரின் வருகைக்காக அகமதாபாத் நகரமே புதுப்பொலிவுடன் விழாக்கோலம் பூண்டுள்ளது. சபர்மதி ஆசிரமம், கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பகுதிகளை அலங்கரித்தல், சாலைகளை சீரமைத்தல் என்று பல்வேறுபணிகள்  தீவிரமாக நடந்துவருகிறது.

நிகழ்ச்சியில் பல்வேறு துறையை சேர்ந்த வி.ஐ.பி.களும் கலந்து கொள்வார்கள் என்பதால் உள்துறை அமைச்சக அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்துவருகின்றனர்.

உலகின், முக்கிய நாடுகளை சேர்ந்த எந்த ஒரு தலைவர் வந்தாலும் அகமதாபாத் அழைத்து சென்று அவர்களை கௌரவவிப்பது என்பது பிரதமர் மோடி அவர்களின் விருப்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.