சென்னை: கொரோனா தொற்று வெகுவாக குணமடைந்து வந்தாலும் தினசரி உயிரிழப்பு என்பது குறையாமல் இருந்தது. தற்போது கொரோனா உயிரிழப்பு 400-க்கும் கீழ் பதிவாகி உள்ளது மக்களை ஆறுதல் அடைய வைத்துள்ளது. தலைநகர் சென்னையிலும் தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. தொற்று பரவல் அதிகம் காணப்படும் வடசென்னையின் மணலி, திருவொற்றியூர், மாதவரம்  பகுதிகளில் தொற்று பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வ அலையின் தாக்கம் கடந்த மாதத்தில் கடுமையாக இரந்த நிலையில், தமிழகஅரசு அறிவித்த, பொது ஊரடங்கு காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று  19 ஆயிரத்து 448 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் தொற்று பாதித்தவர்களின்  மொத்த எண்ணிக்கை 22 லட்சத்து 52 ஆயிரத்தை கடந்துள்ள சூழலில், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2 லட்சத்து 32 ஆயிரமாக குறைந்துள்ளது. நேற்று மட்டும், 351 பேர்,  31 ஆயிரத்து 360 பேர் கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் நேற்று  புதிதாக 1530 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதுவரை சென்னையில் 5,18,162 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலையில், சென்னையில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 19,184 ஆக உள்ளது

நேற்று ஒரே நாளில்  சென்னையில் 40 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 7,516 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதே வேளையில் நோயின் பாதிப்பில் இரந்து 3,713 பேர் குணம் அடைந்து மொத்தம் 4,91,462 பேர் குணம் அடைந்துள்ளனர்.

மண்டலம் வாரியாக விவரம்: