06/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

Must read

சென்னை: தமிழகத்தில் நேற்று  3,715 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ள நிலையில் சென்னையில் 214 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

மாநிலம் முழுவதும்  கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,00,002 பேர் ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 54 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,059 ஆக அதிகரித்துள்ளது.  இதுவரையில் 24,32,017 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் நேற்று மாலை நிலவரப்படி,  தற்போது கொரோனா வார்டில் 34,926 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் கடந்த சில மாதங்களாக நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை படிப்படியாக குறைந்து திங்கள்கிழமை (ஜூலை 5) 214 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 33,637-ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 431 பேர் குணம் அடைந்து,இதுவரை 5 லட்சத்து 23,473 போ குணமடைந்துள்ளனா். தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 1,937 போ மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா். கொரோனா பாதிப்பால் நேற்று 5 பேர் உயிர் இழந்துள்ளனர். இதனால்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,227-ஆக அதிகரித்துள்ளது.

தற்போது சென்னையில் 1,937 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மண்டலம் வாரியாக விவரம்: 

More articles

Latest article