சென்னை: தமிழகத்தில் 9 மாதங்களுக்கு பிறகு ஆயிரத்துக்கும் கீழே கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இன்று 875 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 13 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.  தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது  தமிழக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் இன்று மட்டும் 1,05,495 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5,17,29,726 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று மேலும் 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 27,07,368 ஆக அதிகரித்துள்ளது. பெரம்பலூர், ராமநாதபுரம், மயிலாடுதுறையில் புதிதாக ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகவில்லை.

தமிழகத்தில் இன்று மேலும் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை  மொத்த பலி எண்ணிக்கை 36,204ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில், 6 பேர் தனியார்  மருத்துவமனையிலும், 7 பேர் அரரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24மணி நேரத்தில்  1,012 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், இதன் மூலம் மொத்தம் 26,60,419 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகத்தில் 10,745 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.