சென்னை: தமிழகத்தை  கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், குணமடைவோர் மற்றும் உயிரிழப்பு வெகுவாக குறைந்து வருகிறது.

இன்று மட்டும் புதிதாக 5,870 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,57,697 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரேநாளில் கொரோனா சிகிச்சை பலனின்றி 61 பேர் உயிரிழந்த நிலையில், மொத்ரத பலி எண்ணிக்கை 7,748 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 5,859 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினோர்களின் எண்ணிக்கை 3,98,366 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 965 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,40,685 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று மட்டும் 19 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு 2,845 ஆக உள்ளது.  இதுவரை 1,26,428 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் இன்றைய தேதியில் 11,412 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 81,793 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் இதுவரை 52,12,534 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

மாவட்டங்களில் மொத்த கொரோனா பாதிப்பு விவரம்:

கோவையில் 18,410 பேருக்கும், திண்டுக்கல்லில் 7,154 பேருக்கும் திருநெல்வேலியில் 10,194 பேருக்கும், ஈரோட்டில் 3,728, திருச்சியில் 8,011 பேருக்கும், நாமக்கல் 2,513 மற்றும் ராணிப்பேட்டை 11,174, செங்கல்பட்டு 27,947, மதுரை 14,674, கரூர் 1,802, தேனி 13,073 மற்றும் திருவள்ளூரில் 26,071 பேருக்கு, தூத்துக்குடியில் 11,680, விழுப்புரத்தில் 8,264 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 2,478 பேருக்கும், திருவண்ணாமலையில் 11,430, தருமபுரியில் 1,421பேருக்கும், திருப்பூரில் 3,305, கடலூர் 13,669, மற்றும் சேலத்தில் 12,535, திருவாரூரில் 4,107, நாகப்பட்டினம் 3,179 திருப்பத்தூர் 3,187, கன்னியாகுமரியில் 10,099 மற்றும் காஞ்சிபுரத்தில் 18,125 பேருக்கும், சிவகங்கை 4,225 மற்றும் வேலூரில் 11,517 பேருக்கும், நீலகிரியில் 1,857 பேருக்கும், தென்காசி 5,755, கள்ளக்குறிச்சியில் 6,779 பேருக்கும், தஞ்சையில் 7,305, விருதுநகரில் 13,181, ராமநாதபுரத்தில் 4,931 பேருக்கும், அரியலூர் 3,033 மற்றும் பெரம்பலூரில் 1,401 பேருக்கும், புதுக்கோட்டையில் 6,578 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 2,220 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.