டெல்லி: இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 13,086 ஆக பதிவாகி உள்ளது. நேற்று சிகிச்சை பலனின்றி மேலும் 19 பேர் பலியாகி உள்ளனர். தினசரி பாதிப்பு 2.90 சதவிகிதமாக உள்ளது. தற்போது சிகிச்சையில் 1,13,864 உள்ளனர்.

 

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகிதம் தொடர்பான அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதன்படி நேற்று ஒரே நாளில் மேலும்  13,086 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,35,15,547 ஆக உயர்ந்தது.

கடந்த 24மணி நேரத்தில் மேலும் 19 பேர் பலியாகினர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த  எண்ணிக்கை 5,25,242 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.21% ஆக கஉள்ளது.

நேற்று ஒரே நாளில் 12,456 பேர் குணமடைந்துள்ளனர். இதன்மூலம் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,28,91,933 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.53% ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், நாடு முழுவதும் 1,14,475 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக  மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.26% ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில்   நேற்று ஒரே நாளில் 11,44,805 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,98,09,87,178 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.