05/07/2021: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

Must read

சென்னை: தமிழ்நாட்டில்  நேற்று 3,867 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா 2வது அலையின் தாக்கம் தமிழ்நாட்டில் கட்டுக்குள் வந்துள்ளதால், இன்றுமுதல் ஏராளமான தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இதனால் பொதுப்போக்குவரத்து தொடங்கியதுடன், வழிபாட்டுத் தலங்களும் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 3,867 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனுடன் தமிழகத்தில் இதுவரை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,96,287 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரேநாளில் 72  பேர் தொற்று காரணமாக உயிரிந்ததால், இதுவரை உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  33,005  ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நேற்று  4,382 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பினர். இதனுடன் தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து குணமானவர்களின் எண்ணிக்கை 24,27,988 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் முழுவதும் 35,294 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 2,168 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் நேற்று 222 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இதுவரை  5,33,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று  5 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 8,222 பேர் மரணம் அடைந்துள்ளனர். அதேவேளையில்  481 பேர் குணம் அடைந்து மொத்தம் 5,23,042 பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 445 உடன் முதல் இடத்தில் உள்ளது.

மண்டலம் வாரியாக பாதிப்பு விவரம்:

 

More articles

Latest article