சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 21,410 பேர் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிக பட்சமாக கோவையில் 2663 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது என தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதியதாக 24,410 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 22,16,812 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் தொற்றில் இருந்துகுணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 32,472 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 19,32,778 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று ஒரே நாளில் 4453 பேர் உயிரிந்துள்ளனர். இதுவரை உயரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 26,571 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று மட்டும் 1,75,365 சோதனைகள் செய்யப்பட்டு உள்ளது.
இன்றைய கொரோனா பாதிப்பில் கோவை மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 2,663 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2வது இடத்தில் சென்னை உள்ளது. அங்கு 1,789 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

[youtube-feed feed=1]