டெல்லி: நாடு முழுவதும் கடந்த 24மணி நேரத்தில், மேலும் 9,216 பேருக்கு கொரோனா பாதிப்பு 8,612 பேர் குணமடைந்துள்ளனர்.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 8மணியுடன் முடிந்த 24மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தகவல் வெளியிட்டு உள்ளது.
நாடு முழுவதும் நேற்று ஒரே புதிதாக மேலும் 9,216 பேர் கொரேனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,46,06,541 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சிகிச்சை பலனின்றி 391 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம், மொத்த மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,70,115 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.36% ஆக குறைந்துள்ளது.
நேற்று மட்டும் தொற்றில் இருந்து 8,612 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3,40,45,666 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விகிதம் 98.35% ஆக உயர்ந்துள்ளது
தற்போது இந்தியாவில் முழுவதும் 99,976 பேர் கொரோனா தொற்றுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறு வோர் விகிதம் 0.29% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 73,67,230 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,25,75,05,514 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 64,46,68,082* மாதிரிகளின் சோதனை செய்யப்பட்டு உள்ளன. நேற்று (டிசம்பர் 02) அன்று சோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 11,57,156 என ஐசிஎம்ஆர் தெரிவித்து உள்ளது.