அமெரிக்காவில் 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி

Must read

நியூயார்க்

மெரிக்காவில் 8 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு வகையில் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது.  இதுவரை ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா எனப் பலவகையில் உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது ஒமிக்ரான் என்னும் பெயரில் மேலும் உருமாற்றம் அடைந்துள்ளது.  இது அதி வேகமாகப் பரவும் தன்மையுடையது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது.   இந்த பாதிப்பு தற்போது அமெரிக்காவிலும் பரவத் தொடங்கி இதுவரை 8 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.  இதில் நியூயார்க் மாகாணத்தில் 5 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.

தவிர கலிஃபோர்னியா, கொலராடா, மினிசோடா மாகாணங்களிலும் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதுவரை அமெரிக்காவில் கண்டறியப்பட்ட அனைவருக்கும் அறிகுறிகள்  மற்றும் பாதிப்பு மிகச் சிறிய அளவில்மட்டுமே உள்ளது.  எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.

More articles

Latest article