புதுடெல்லி: இந்த ஆண்டின் இறுதியில் இந்தியா, கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றிருக்க வேண்டுமெனக் கூறியுள்ளார் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ ஆதர் பூனவல்லா.

தடுப்பு மருந்து உற்பத்தி அளவின் அடிப்படையில், உலகின் பெரிய நிறுவனமாக இது கருதப்படுகிறது. “இந்தாண்டு டிசம்பர் துவக்கத்தில், கோவிட்-19 தடுப்பு மருந்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்யும்” என்றார் அவர்.

“அடுத்த 2 வாரங்களுக்குள் பரிசோதனைகளை துவங்கவுள்ளோம். ஐசிஎம்ஆருடன் இணைந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இம்மாத இறுதியிலிருந்து தடுப்பு மருந்துகளை நாங்கள் உற்பத்தி செய்யத் துவங்குவோம்” என்றுள்ளார் அவர்.

இம்மாதம் 7ம் தேதி, இந்த தடுப்பு மருந்து முயற்சியில், காவி(Gavi), பில் & மிலிண்டா கேட்ஸ் ஃபவுண்டேஷன் ஆகியவற்றுடன் கூட்டிணைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சீரம் நிறுவனம் அறிவித்தது.

மேலும், கோவிட்-19 தடுப்பு மருந்துகளை தயாரித்து, நடுத்தர மற்றும் மிகக்குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.