சிங்கப்பூர்

ந்திய மாநிலங்களில் வர்த்தகம் நடத்த உகந்த மாநிலங்களின் பட்டியலை சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.

ஆசிய தேர்வு மையக் கழகத்தின் கீழ் இயங்கும் டென்கீ பொது நல கல்லூரி மாணவர்கள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தலைமையில் இந்திய மாநிலங்களில் வர்த்தகம் நடத்த உகந்த மாநிலம் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தினார்கள். இந்த ஆய்வில் பணியாளர்கள் கிடைத்தல், வெளிநாட்டு முதலீடுகள், முன்னேற்றம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பலவும் ஆய்வு செய்யப்பட்டன.

இந்த ஆய்வின் முடிவில் வர்த்தகம் நடத்த மிகவும் உகந்த மாநிலமாக ஆந்திரப் பிரதேச மாநிலம் தேர்ந்தெடுக்க பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் மகாராஷ்டிராவும் மூன்றாவதாக டில்லியும் உள்ளன. சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மக்ழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடு, “எங்கள் மாநிலத்தை முதல் மாநிலமாக தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. சர்வதேச முதலீட்டாளர்கள் மாநில அரசின் ஸ்திரத்தன்மையை மிகவும் கருத்தில் கொள்கின்றனர். ஆகவே மாநில அரசு தன்னிடம் உள்ள குறைகளையும் நிறையாக மாற்றி வலுவானதாக இயங்க வேண்டும். இதில் ஆந்திர மாநில அரசு முழு கவனமும் செலுத்தி வருகிறது.

சர்வதேச முதலீட்டாளர்கள் இடையில் ஆந்திரப் பிரதேசம் நல்ல பெயரை பெற்றுள்ளதும் இதற்கு முக்கிய காரணமாகும். அரசு சமீபத்தில் அனைத்து இல்லங்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கான 1.4 கோடி ஸ்மார்ட் போன்கள் மாநிலத்திற்குள்ளேயே உற்பத்தி செய்யப்பட உள்ளன.” என தெரிவித்துள்ளார்.