‘மகேஷ் பாபு சரிலேறு நீக்கவேறு படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பரசுராம் இயக்கும் ‘சரக்கு வாரி பாட்டா’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .
சரக்குவாரி பாட்டா படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மகேஷ் பாபுவின் தந்தை நடிகர் கிருஷ்ணாவின் பிறந்த நாளன்று வெளியானது.
தமன் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ள இந்தப் படத்தை 14 ரீல்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் மகேஷ் பாபுவின் தயாரிப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கவுள்ளன.
நாயகியாக நடிக்க பல்வேறு நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக இதில் மகேஷ் பாபுவுக்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். மகேஷ் பாபுவுடன் கீர்த்தி நடிக்கும் முதல் படமாக இது அமைந்துள்ளது.