download

டில்லி:  அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வை அந்தந்த மாநில அரசுகளே நடத்த அனுமதிக்கக் கோரி தொடர்ந்த வழக்குகள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே மருத்துவ பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக மத்திய அரசு மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்குகளும் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கைக்கு அகில இந்திய பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்து, அதற்கான தேதிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் கட்ட நுழைவுத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களும், மருத்துவக் கல்வி நிறுவனங்கள் சிலவும் உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. .