டெல்லி: புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலை 4 மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையருக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் 2011- ஆம் ஆண்டு நடத்த வேண்டிய உள்ளாட்சித் தேர்தல்வ இதுவரை நடத்தப்பட வில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, 4 மாதத்திற்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல்  இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. ‘இதற்கு, எம்.எல்.ஏ.- கவுன்சிலர் அதிகாரப்பகிர்வு, வார்டு மறுவரையறை பிரச்சனையால் தேர்தல் நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  மாநிலத்தில் உடனே உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில  தேர்தல் ஆணையருக்கு உத்தரவிட்டது.  புதுச்சேரி வார்டு மறுவரையறை பணிகளையும்  4 மாதங்களுக்குள் முடித்து விட்டு தேர்தலை நடத்த வேண்டும், என்று  உத்தரவிட்டதுடன்,  இவ்வளவு காலம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருப்பது வருந்தத்தக்கது என்றும் தெரிவித்துள்ளது.