77
பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய 5 மத்திய மந்திரிகள் தமிழ்நாட்டுக்கு வர உள்ளனர்.
சென்னை:
5 மாநில சட்டசபை தேர்தலில் அசாம் மாநிலத்தில் ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. மேற்கு வங்க மாநிலத்திலும் பாதி தொகுதிகளில் பிரசாரம் ஓயும் நிலையில் உள்ளது. இதையடுத்து பா.ஜ.க. மேலிட தலைவர்களின் பார்வை தமிழ்நாடு, கேரளா மாநிலங்களில் பக்கம் திரும்பத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க. தேசியத் தலைவர்களில் 20 பேரை களம் இறக்க திட்டமிட்டுள்ளனர்.
பா.ஜ.க. தலைவர் அமித்ஷா நாளை (புதன்கிழமை) திருச்சி வருகிறார். அங்கு பா.ஜ.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரசாரத்தை தொடங்க உள்ளார். அமித்ஷாவைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், சுஷ்மாசுவராஜ், நிதின் கட்காரி, ஸ்மிருதி இரானி, வெங்கைய்யா நாயுடு ஆகிய 5 பேரும் தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரசாரம் செய்ய வர உள்ளனர். பா.ஜ.க. எம்.பி. ஹேமமாலினியும் தமிழகம் வர திட்டமிட்டுள்ளார்.
தமிழகம் வரும் மத்திய மந்திரிகள் எந்தெந்த நகரங்களுக்கு சென்று பிரசாரம் செய்வார்கள் என்ற பயணத்திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. விரைவில் அந்த பயணத்திட்டம் அறிவிக்கப்பட உள்ளது.