டில்லி:
பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு நாட்டு மக்களுக்கு நன்றி என முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு குடியரசு தலைவர் விருது காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ஜனாதிபதி யுமான பிரணாப் முகர்ஜி உள்பட 3 பேருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சமூக சேவகர் நனாஜி தேஷ்முக், கவிஞர் பூபென் ஹசாரிகா, பிரனா முகர்ஜி ஆகிய 3 பேருக்கு பாரத ரத்னா விருது அளிக்கப்படுவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், எனக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு நாட்டு மக்களுக்கு நன்றி. எப்போதும் சொல்வதைபோல் இப்போதும் சொல்கிறேன் மக்களிடம் இருந்து பலவற்றை பெற்றுள்ளேன் எனக்கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel