போபால்:

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ம.பி.பாஜக தலைவர்  பிரகலாத் பந்த்வாரை சுட்டுக்கொன்றது கொன்றது அவரு நெருங்கிய உறவினர் என்று காவல்துறையினர்  தெரிவித்து உள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாஜக தலைவர் பிரகலாத் பந்த்வார் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இது தொடர்பான விசாரணையில் அவரை  சுட்டுக்கொன்றவது அவரது உறவினர் பைராக்கி என்று காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. அம்மாநில முதல்வராக  கமல்நாத் இருந்து வருகிறார். இந்த நிலையில் கடந்த  17-ம் தேதி மன்ட்சார் பகுதி பாஜக தலைவர் பிரகலாத் பந்த்வார் (வயது 50) என்பவர் பட்டப்பகலிலேயே மாண்ட்ஸூர் நகரில் மர்ம நபரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் காரணமாக பிரகலாத் பந்த்வார் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொழில் போட்டியால் நடைபெற்றிருக்கலாம் என கூறப்பட்டது.

ஒரே வாரத்தில் 2 பாஜக தலைவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், பாஜகவை சேர்ந்த ஒருவரை கைது செய்து விசாரித்தனர்.

விசாரணையில் மணிஷ் பைராகி என்பவர்  பிரகலாத் பந்த்வாரை சுட்டுக்கொன்றது தெரிய வந்துள்ளது. இவர் பிரகலாத் பந்த்வார் மீது மூன்று முறை சுட்டிருப்பதும், அதன் காரணமாக அவர் உயிரிழந்ததா கூறப்படுகிறது. விசாரணையில்  நிலத்தகராறு காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி-உஜ்ஜைன் ரேஞ்ச் ராகேஷ் குப்தா, மணிஷ் பைராக்கி என்பவர் கொலை செய்யப்பட்ட பிரகலாத் பந்த்வாருக்கு நெருக்கமானவர் என்றும், இவர் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி, ஆயுத சட்டம்  வழக்குகள் உட்பட, ஏழு வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், பைராக்கி, தனது அம்மாவின் சிகிச்சைக்காக பெரும் தொகை செலவிட்டார். மேலும் பணத் தேவைப்படவே பிரகாத்திடம் பணம் கேட்டிருக்கிறார். ஆனால், பணம் கொடுக்க தயங்கவே  இருவருக்கும் இடையே உள்ள உறவு முறிந்துள்ளது. ஏற்கனவே இருவருக்கும் இடையே மென்சவுர் நகரத்தில் 2000 சதுர அடி நிலப்பகுதி தொடர்பாக பிரச்சினை இருந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த படுகொலை நடைபெற்றுள்ளது என்று கூறினார்..

இதற்கிடையில் மறைந்த பிரகாலத் இறுதிச்சடங்கில்  முன்னாள் பிரதமர் சிவாஜிராங் சிங் சவுகான் மற்றும் மாநில பா.ஜ.க தலைவர் ராகேஷ் சிங் உள்ளிட்ட பிஜேபி மூத்த தலைவர்கள்  கலந்து கொண்டனர்.