தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து பரவியிருக்கும் செய்திகள் தமிழகத்தை பதட்டத்துக்குள்ளாக்கி இருக்கிறது.
இந்த நிலையில் நாளை, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக யூகச் செய்திகள் பரவியிருக்கின்றன.
இது குறித்து தெரிவித்த தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மாஃபா பாண்டிராஜன், “நாளை ( திங்கட்கிழமை) பள்ளிகள் வழக்கம்போல இயங்கும். விடுமுறை என்பது தவறான தகவல்” என்று தெரிவித்துள்ளார்.