ஜீவசுந்தரி வாசுதேவன்
ஜீவா வாசுதேவன்

பீப் சாங்கை மறந்து இப்போது விஜயகாந்தின் செயல் குறித்து கதைக்க ஆரம்பித்தாகிவிட்டது. அதற்காக விஜயகாந்த் செயலை நியாயப்படுத்தும் எண்ணமில்லை. ஆனால், .உனக்குத் தகுதியிருக்கா? என செய்தியாளரைப் பார்த்து எகிறிய இளையராஜா போல ‘தெய்வீகத்தன்மை’ வாய்ந்தவராக இருந்திருந்தால் இவரின் துப்பல் கூட சாமி தீர்த்தம் தெளித்தது போல நியாயப்படுத்தியிருப்பார்களோ என்னவோ?

எவ்வளவு பெரிய ஆளானாலும் உனக்குத் தகுதியிருக்கா? என அடுத்தவர்களை எடை போடும் உரிமையில்லை. சின்ன சகிப்புத்தன்மை கூட இல்லாதவர் எப்படி மனித மனங்களை ஆற்றும் இசையைக் கொடுக்க முடியும்.

விஜயகாந்தின் ஒவ்வொரு செயலையும் எள்ளி நகையாடாத ஊடகங்களோ, வெளியாகாத மீம்களோ உள்ளனவா? அவர் கேட்டது போல ஜெ.,வை இது போல கிண்டலாய் சித்தரிக்கவோ, எதிர் கேள்வி கேட்கவோ துணிவில்லாத செயல் என்பது எளியோனின் குடுமி வலியோன் கையில் என்பதாகவே உள்ளது.

செய்தியாளர்களின் பார்வை பாரபட்சமில்லாமல் இருப்பதே ஆரோக்கியமானது. விஜயகாந்திற்கு தகுதியிருக்கிறது, இல்லை என்பது வேறு விஷயம். இல்லையென்றால் நிராகரியுங்கள். அதைவிட்டு, இத்தனை நாட்களாகத் தெரியாத அவரது குறைகளை இன்று பட்டியலிடுவதைப் பார்த்தால் எங்களை மதிக்காதவன் இன்றுடன் செத்தான் என்பதுபோல் உள்ளது