வரலாறு முக்கியம் அமைச்சரே…
சமீபகாலமாகவே, தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கும் நடிகை ராதிகா, கடந்த 89ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை தீவிரமாக ஆதரித்தார். அக் கட்சி வெற்றி பெற்ற பிறகு, அவர் அளித்த பேட்டி, 17.02.1989 தேதியிட்ட  தராசு வார இதழில் வெளியானது.
 
நடந்து முடிந்த சட்டமன்றத்  தேர்தலில்  தி,மு.க வின்  பிரச்சார பீரங்கியாகப்  பயன்பட்ட நடிகை ராதிகாவைச் சந்தித்தோம்.
 
1 r
 
தராசு; தி.முக.மீது  உங்களுக்குத் திடீர் பற்று ஏற்படக் காரணம் என்ன?
ராதிகா; தி.மு.க. ஒரு கட்சி..  அதில் சேர வேண்டும் என்கிற ஒரு வெறி எனக்கு கிடையாது. தலைவருடன் ஒரு குடும்பம் மாதிரி பழகிக் கொண்டிருக்கிறோம். அவரது ஆட்களில் ஒருத்திதான் நான். என்னை தி.மு.க.விற்கு வெளி ஆள் என்று சொல்ல முடியாது.
தராசு; சினிமாவில் பேசும் பொழுது டைரக்டரோ, வசனகர்த்தாவோ சொல்வதை மனப்பாடம் செய்து ஒப்பித்து விடுகிறீகள்.ஆனால் அரசியல் கூட்டங்களில் பேசும் போது நிலமை அப்படியல்ல. எனவே அதை எப்படி சமாளித்தீர்கள்?
ராதிகா; ஏதாவது பேப்பர் கட்டிங்குகள் கையில் இருக்கும். அதைப் பார்த்துக் கொண்டு பேசுவேன். ஒரு சினிமாகாரியைக் கேள்வி கேட்பது போல் என்னிடமும் கேட்கிறீகளே?
தராசு; மொத்தம் எத்தனை தொகுதிகளுக்குத் தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றீர்கள்?
ராதிகா; 110 தொகுதிகளுக்கு மேல் போய் இருக்கிறேன்.
தராசு; முதன் முதலில் அரசியல்  கூட்டத்தில் பேசிய போது உங்கள் அனுபவம் என்ன?
ராதிகா;  தலைவர் (கருணாநிதி) போட்டியிட்ட துறைமுகம் தொகுதியில் தான் நான் முதலில் பேசினேன். ஒரு சினிமா ஆர்டிஸ்ட் என்ற முறையில் அவ்வளவு கூட்டத்தை நான் ஒரே இடத்தில் பார்த்ததே இல்லை. ரோட்டில் . நான் ஆச்சரியப்படுவதைப் பார்த்து விட்டு அவரே, “ இது ஒன்றுமில்லை.. இன்னும் பார்க்கப் போகிறாய்” என்றார். முதல் தடவையாகப் பேசுவதால் ஒரு டென்ஷன் இருந்தது.
தராசு; தி.,மு.க தலைவர் கருணாநிதி உங்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் வழங்கினாரா?
ராதிகா; தினந்தோறும் நான் எந்த ஊரில் இருந்தாலும்  அவர் எனக்கு போன் செய்து பேசுவார். நான் என்னென்ன பேசினேன், எப்படி எப்படி இருந்தது என்று கேட்பார்.
தராசு; ஜனவரி 22 தேர்தல் முடிவுகள் வெளி வந்தபோது  நீங்கள்  எங்கு இருந்தீர்கள்?
ராதிகா;. நான் ஷுட்டிங்கில் இருநதேன். பத்து மணிக்கு டெலிபோனில் செய்தி வந்தது. உடனே தலைவர் வீட்டிற்குச் சென்றேன். அன்று முழுவதும் அவர்கள் வீட்டில் தான் இருந்தேன். ரிசல்ட் வரவர மிகவும் சந்தோஷமாக இருந்தது.
தராசு; அந்த நேரத்தில் என்ன நினைத்தீர்கள்?
ராதிகா;;  மீண்டும் மீண்டும் ஒரு சினிமாக்காரியிடம் கேட்பது போலவே என்னிடம் கேட்கிறீர்ளே? சினிமாவில் தாலி கட்டும் பொழுது உங்களுக்கு என்ன உணர்ச்சி ஏற்பட்டது என்று  பேட்டியில் சிலர் கேட்பார்கள். உண்மையைச்  சொல்வதானால் ஒரே தலைவலியாக இருந்தது  என்று தான் சொல்ல வெண்டும்.  ஏனென்றால் கூட்டமாக இருக்கும். விளக்கு வெளிச்சம். ஆட்கள் அங்குமிங்கும்  சத்தம் போட்டுக் கொண்டிருப்பார்கள். (சற்றுபொறுத்து) என்னைப் பொறுத்தவரையில்  நான் எப்போதும் எதையும் முழுவதுமாகத் தான் பார்ப்பேன். தி.மு.க.வின் வெற்றி ஒரு ஸ்வீப். இது போன்ற ஸ்வீப் ஒரு மனிதனுக்கு கிடைப்பது அபூர்வம். அதனால் எனக்கு மிகவும் சென்ஷேனாகவே இருந்தது.
தராசு; தி.மு.க.தலைவர் கருணாநிதி முதலமைச்சர் ஆன போது நீங்கள் போய் இருந்தீர்களா?
ராதிகா; ஆம் சந்தோஷமாக இருந்தது.
தராசு; அதற்கப்புறம் சி.எம்.மை எப்போது சந்தீர்கள்?
ராதிகா; சந்திக்கவில்லை. ஏன் சந்திக்க வேண்டும்? எனக்கு வேலை இல்லையா? இருபது நாளாக ஷூட்டிங் கான்சல் செய்திருந்தேன். அதனால் டே அண்டு நைட்  ஷூட்டிங். எனக்கு வேலை அதிகம். பார்த்தாச்சா? சந்தோஷம் அவ்வளவுதான். அதற்கு மேல் என்ன பண்ண வேண்டும்.?
 
2 r
தராசு; இல்லை …கட்சியிலே உங்களுக்கு எம்.எல்.சி பதவி தருவதாக..?
ராதிகா; யாருக்கு? எனக்கா? முதலில் இருந்தே நான் எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டு எந்தக் கட்சிக்கும் போகவில்லை. ஏதோ தலைவருக்குக்க நான் போனேன்.
தராசு; தி.மு.க. உறுப்பினராகி விட்டீர்களா?
ராதிகா; கிட்டதட்ட…! என்ன கேள்வி இது?
தராசு; இல்லை.உறுப்பினர் கார்டு வைத்திருக்கிறீர்களா என்று தெரிந்துக் கொள்ளக் கேட்டோம்.
ராதிகா; அது இருந்தால் தான் உறுப்பினரா?
தராசு; ஒரு கட்சியின் உறுப்பினர் என்றால்  அந்தக் கட்சியின் உறுப்பினர் கார்டு கண்டிப்பாக இருக்க வேண்டுமே?
ராதிகா; அதெல்லாம் வெறும் பார்மாலிட்டி. நான் தி.மு.க.உறுப்பினர் இல்லை.
தராசு; தேர்தல் நேரத்தில் டி.ராஜேந்தர் உங்களைத் தாக்கி அறிக்கை விட்டாரே? அது பற்றி உங்கள் கருத்து என்ன?
ராதிகா; அது அவருடைய அபிப்பிராயம். ஒவ்வொரு மனிதனுக்கும்  ஒவ்வொரு சொந்த அபிப்பிராயம் இருக்கும். இன்னொவருடைய அபிப்பிராயத்தை நான் மதிக்கிறவள். டி.ஆரின் அபிப்பிராயத்திற்கு நான் என்ன பண்ண முடியும்.?