சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினியின் 168 வது படத்தை சிவா இயக்குகிறார் ’வீர்ம்’, ’வேதாளம்’, ‘விவேகம்’ மற்றும் ‘விஸ்வாசம்’ என வெற்றிப்படங்களை கொடுத்தவர் சிவா.

இப்படத்தில் காமெடியனாக நடிகர் சூரி இணைந்துள்ளார். இதில் ரஜினியுடன் நடிகர் பிரகாஷ் ராஜ், நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகை மீனா , குஷ்பூ இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

வெற்றி ஒளிப்பதிவு செய்ய, ரூபன் எடிட்டராகப் பணியாற்றவுள்ளார். டி.இமான் இசையமைக்க, விவேகா பாடல்கள் எழுதுகிறார்.

மும்பையில் ‘தர்பார்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவை முடித்துவிட்டு, அங்கிருந்து நேராக ஹைதராபாத்துக்குச் சென்றார் ரஜினி. படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 18) முதல் தொடங்கியது.

முதற்கட்டப் படப்பிடிப்பில் பாடல் காட்சி ஒன்றைப் படமாக்கி வருகிறார்கள். இதனை இந்தப் படத்தின் இசையமைப்பாளர் இமான் தனது ட்விட்டர் பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.