ramdev
அரியானா மாநிலம் ரோட்டக்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய ராம்தேவ், இந்த நாட்டில் சட்டம் என்ற ஒன்று இல்லை என்றால் ‘பாரத மாதா வாழ்க’ என்று சொல்ல மறுப்பவர்களின் தலையை வெட்டுவோம் என்று கூறினார்.
பாரத மாதா வாழ்க என்ற கோஷத்தினை எந்த மதமாவது தடை செய்தால், அது தேச நலனுக்கு எதிரானது என்று கூறிய அவர், இந்த கோஷமானது தாய்நாட்டை போற்றுவதாகவும், எந்த மதத்தையும் குறிப்பதில்லை என்றும் பேசினார்.
கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினாலும் ‘பாரத மாதா வாழ்க’ கோஷம் எழுப்ப மாட்டேன் என மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி கூறியிருந்தார். இதுபோன்று பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், ராம்தேவின் கருத்து புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளது. ராம்தேவுக்கு எதிராக முன்னாள் உள்துறை மந்திரி சுபாண் பத்தா தலைமையில் சிவில் சமூக உறுப்பினர்கள் இன்று போலீசில் புகார் அளித்துள்ளனர்.