12313814_857727491015405_6726584752227046757_n

தந்தி தொலைக்காட்சி விவாதங்களில் திமுகவினர் பங்கேற்க வேண்டாம் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது வாய்மொழியாக ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது.

கடந்த மாதம் 27ம் தேதி, தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான முரசொலியில் அக் கட்சியின் தலைமைக் கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

“தந்தி தொலைக்காட்சியில் நடைபெறும் விவாதங்களில் தி.மு.க. கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பது என்று முடிவு!” என்ற தலைப்பில் வெளியான அந்த அறிவிப்பில், “ஆளும் கட்சியாக இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் ஆளும் அ.தி.மு.க. கட்சிக்கு ஆதரவாகவும் தி.மு.கழகத்தை எதிர்துத பிரச்சாரம் செய்துவருது ஒரு சில ஊடகத்துறையினரின் வாடிக்கையாக இருந்துவருகிறது.

இந்நிலையில் தற்போது “நடுநிலை” என்ற பெயரை சூட்டிக்கொண்டுள்ள “தந்தி” தொலைக்காட்சி ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு ஆதரவாகவும் தி.மு.கழகத்துக்கு எதிராகவும் தொடர்ந்து திட்டமிட்டு பிரச்சாரம் செய்துவருகிறது.

தந்தி டிவியில் திமுக வழக்கறிஞர்
தந்தி டிவியில் திமுக வழக்கறிஞர்

குறிப்பாக பல்வேறு “விவாதங்கள்” என்ற பெயரில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்பவர்களை வைத்துக்கொண்டு, – உண்மைக்கு மாறாக – தி.மு.க தரப்புக்கு பதிலளிக்க உரிய வாய்ப்பு அளிக்காமல் – ஆளும் அ.தி.மு.கவுக்கு பிரச்சாரம் செய்து வருவதால் தி.மு.க, “தந்தி” தொலைக்காட்சியில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து சில நாட்கள், தி.மு.க.வினரை தந்தி தொலைக்காட்சி விவாதங்களில் காண முடியவில்லை.

ஆனால் சில நாட்களுக்கு முன், தந்தி தொலைக்காட்சியில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் பங்குபெற்றார்.

இன்று ஒரு விவாதத்தில் தி.மு.க. வழக்கறிஞர் கண்ணதாசன் பங்குபற்றார்.

இதையடுத்து, தந்தி டிவியில் திமுகவினர் பங்குகொள்ள தடைவிதிக்கப்பட்டது வாய்மொழியாக ரத்து செய்யப்பட்டதோ?