இன்று நடந்த முதல்வர் ஜெயலலிதா பதவியேற்புவிழாவில், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலினுக்கு ஏழாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டதைக் கண்டித்து அறிக்கை விட்டிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி.
இதையடுத்து, கருணாநிதியின் 2006 – 11 ஆட்சிகாலத்தில் கோவை நகரில் நடந்த செம்மாழி மாநாடு பற்றியும்,  அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றையும்  இணையங்களில் பதிவேற்றி வருகிறார்கள் பலர்.
 

மேடையில் கருணாநிதி குடும்பம்.. இருக்கை இ்ன்றி எட்டிப்பார்க்கும் தமிழறிஞர் வா.மு. சேதுராமன்
மேடையில் கருணாநிதி குடும்பம்.. இருக்கை இ்ன்றி எட்டிப்பார்க்கும் தமிழறிஞர் வா.மு. சேதுராமன்

அது,  தமிழறிஞர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்காக போடப்பட்ட மேடையில், கருணாநிதியின் குடும்பம் அமர்ந்திருக்க.. தமிழறிஞரான வா.மு.சேதுராமன், இருக்கை இன்றி கடைசி வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்.. சாலையில் செல்லும் ஊர்வலத்தை எட்டி எட்டி பார்த்தபடி.
“ஜெயலலிதாவை குறை சொல்ல கருணாநிதிக்கு அருகதை உண்டா” என்ற தலைப்பில், “தமிழுக்காக என்று சொல்லப்பட்ட செம்மொழி விழாவிலேயே தமிழறிஞர்களை கடைசி வரிசைக்கு இருக்கை இல்லாமல் தள்ளிய கருணாநிதி,  இப்போது நாகரீகம் பற்றி பேசுகிறாரா” என்ற கேள்வியுடன்  பலரும் இந்த புகைப்படத்தை பதிவிட்டு வகிறார்கள்.