முதல்வர் ஜெயலலிதா பதவியேற்பு விழாவில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு ஏழாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது குறித்து தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் தி.மு.க தலைவர் மு. கருணாநிதி. இது குறித்து அவர் வெளியிடடுள்ள அறிக்கை:
“ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது! தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும்!
முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலேயே பிறவிக்குணத்தை விடாத ஜெயலலிதாவின் பழி வாங்கும் போக்கு!
13238959_1208044359207767_7600935607723616698_n
23-5-2016 அன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழாவில், அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க் கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு – அதே தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு – அமர வைத்து வேண்டுமென்றே திராவிட முன்னேற்றக் கழகத்தை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது! தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும்!