ஜவகல் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஆலயம்
தகவல்கள்: ஊர்: ஜவகல்
மூலவர்: ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்
பிறசன்னதிகள்: ஸ்ரீவேணுகோபலன், 12ஆழ்வார்கள்
கட்டியவர் : ஒய்சள ராஜா வீர சோமேஸ்வரா (1235-1263)
சிறப்புகள்:
1250 ஆண்டு கட்டப்பட்ட கோவில். நட்சத்திர வடிவ பீடத்தின்மீது த்ரிகூட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது.கோவிலைச் சுற்றிலும் சிறப்பான சிற்பங்கள்.
தலவரலாறு: அவந்தி நகர அனந்தாரிசாரி என்கிற பட்டருக்குத் திருமணம் முடிந்து 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தைப்பேறு கிட்டாத பெருமாள் பக்தர் கனவில் தோன்றி லட்சுமி நரசிம்மர் விரதம் கடைப்பிடிக்கச் சொல்ல அதன் படி விரதமிருந்து குழந்தைச் செல்வத்துடன் அனைத்து செல்வங்களையும் பெற்றனர்.
கலிங்க நாட்டு மன்னன் விக்கிரமசிங்கன் மீது கோசல நாட்டு மன்னன் போர் தொடுக்க எதிர்பாரா நிலை என்றாலும் கலங்காமல் போருக்குத் தயாராகி படை வீரர்களுடன் செல்லும்போது வழியில் இக்கோவிலைப் பற்றி மந்திரி சொல்ல மனதார வேண்டி வெற்றி பெற்றால் விரதம் அனுஷ்டிப்பதாகக் கூறிச் சென்று போரில் வெற்றியடைந்தான். ஆனால் வேண்டுதலை மறக்க நோய்வாய்ப்பட்டான். மந்திரி மன்னனின் வேண்டுதலை ராணியிடம் சொல்ல தவற்றை உணர்ந்து விரதமிருந்து நோய் நீங்கப் பெற்று வழிபட்டான்.
அதிசய சிற்பங்கள் நிறைந்த ஜவகர் லக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமி கோயில் ஹளேபீடிலிருந்து 15 km தூரத்தில் உள்ளது

செல்லும் வழி: ஹாசன்