சேலம்: சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் போலியான கணக்குகள் தொடங்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை சோதனையில் தெரியவந்துள்ளது.
சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் வருமான வரித்துறையினர் இன்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது பல போலிக் கணக்குகள் அங்கு தொடங்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
 

இந்தப் போலிக் கணக்குகள் மூலம் ரூ.150 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றப்பட்டிருக்கலாம் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இந்த விசாரணையின் போது வங்கியிலிருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. அவற்றின் உதவியுடன் மேற்கொண்டு விசாரணையைத் தொடரரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த வங்கியின் தலைவராக அதிமுக.வை சேர்ந்த இளங்கோவன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Deposits were made in Fictitious accounts to the tune of Rupees 150 Crores in Salem central cooperative bank. Chairman of this bank is AIADMK man Elangovan