போபால்:

த்திய பிரதேச மாநில புலிகள் சரணாலயத்தில் உள்ள காலர்வாலி என்ற பெண் புலி தற்போது 4 குட்டிகளை ஈன்று, கடந்த 10 ஆண்டுகளில் 30 குட்டிகளை  ஈன்று சாதனை படைத்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள  பெஞ்ச் புலிகள் சரணாலயத்தில் பராமரிக்கப் பட்டு வரும் பெண்புலியான காலர்வாலி காப்பகத்தின் ராணி என்றும் இளவரசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த புலி தனது 8வது பிரசவத்தில், தற்போது 4 குட்டிகளை ஈன்றுள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகளில்  30 குட்டிகளை ஈன் றுள்ளது. இதனை அங்குவரும் பார்வையாளர்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

ஏற்கனவே இதே காப்பகத்தில் பராமரிக்கப்பட்ட  பரிமாதா என்ற புலி ஈன்ற நான்கு புலிக்குட்டிகளில் ஒன்று இந்த காலர்வாலி என்ற பெண் புலி.

காலர்வாலிக்கு தற்போது 14 வயதாகிறது. பொதுவாக புலிகளின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள்தான் கூறப்படுகிறது. ஆனால், காலர்வாலி  கடந்த 2008-ம் ஆண்டு முதலே குட்டிகளை ஈன்று சாதனை படைத்து வருகிறது.

2008ம் ஆண்டு  மே மாதம் தனது  முதல் பிரசவத்தில் 3 குட்டிகளை ஈன்றது. ஆனால், அந்த குட்டிகள் காய்ச்சல் காரணமாக இறந்துவிட்டன. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. ஆனால்,  பின்னர் 2008ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2வது பிரசவத்தின்போது 4 குட்டிகளை ஈன்றது.  தொடர்ந்து ஆண்டுதோறும் குட்டிகளை ஈன்று வந்த நிலையில், 2017-ம் ஆண்டில் குட்டிகளின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்தது. தற்போது மேலும் 4 குட்டிகளை ஈன்று 30 குட்டிகளை ஈன்ற புலி என்ற சாதனையை பெற்றுள்ளது.