kalabhavan mani for the shoot5152013111608PM
கொச்சி:
நேற்று காலமான பிரபல நடிகர் கலாபவன் மணியின் மரணத்தில் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. அவரது மரணத்துக்குக் காரணம் அதீதமாக மதுவா, அல்லது மதுவில் கலக்கப்பட்ட விஷாமா என்ற விவகாரம் வெடித்திருக்கிறது.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாலக்குடியில் பிறந்தவர் கலாபவன் மணி. 1995ம் ஆண்டு மலையாள திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழ்,  தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்தார். சிறந்த நடிகாரன அவர் நகைச்சுவை, வில்லன் என பல்வேறுபட்டட கதாபாத்திரங்களில் நடித்தார்.
தமிழில் பாபநாசம், எந்திரன், ஜெமினி, அன்னியன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து புகழ் பெறற கலாபவன் மணி, சிறந்த நடிகருக்கான தேசிய விருது மற்றும், கேரள அரசு விருதுகளை பெற்றவர்.
பல குரல்களில் பேசும் வல்லமை பெற்ற மணி, பின்னணி பாடகராகவும், இசையமைப்பாளராகவும் விளங்கினார்.
இப்படி பன்முகத்தன்மை கொண்ட மணி ஆரம்ப காலத்தில் சாலக்குடியில் ஆட்டோ ஓட்டி பிழைத்தார் என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கும்.
மணின் மரணம் குறித்து அவரது நெருங்கிய நண்பர்கள் இருவேறு கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். “மணிக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. அதீத மது காரணமாகவே அவரது கல்லீரல் கெட்டுப்போனது. அதற்கான சிகிச்சையும் பலனளிக்காமல் இறந்துவிட்டார்” என்கிறார்கள் ஒரு சாரார்.
மற்றொருசாரார், “சுய நினைவு இல்லாத நிலையில் மருத்துவமனைக்கு மணி கொண்டுவரப்பட்ட போது அவரது உடலில் விஷத் தன்மை இருந்தது  என மருத்துவர்கள் தெரிவித்தார்கள்” என்கிறார்கள்.
இதற்கிடையே மணியின் சகோதரரும் சந்தேகம் கொண்டு போலீஸில் புகார் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணையில் இறங்கியிருக்கிறார்கள். கடைசியாக மணி தனது நண்பர்களுடன் மது அருந்தி மயங்கிப்போன இடத்திற்கு சிறப்பு புலனாய்வுக்குழுவினர் சென்று விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.
“நல்ல அறிவாற்றல் கொண்ட கலாபவன் மணி, மனிதநேய பண்பாளராகவும் விளங்கினார். தன்னிடம் உதவி கேட்டவர்க்கெல்லாம் தன்னாலான உதவிகளைச் செய்தார். ஆனால் தர்மம் தலைகாக்கவில்லை. குடிப்பழக்கம் அவரது உயிரைப் பறித்துவிட்டது” என்றே பெரும்பாலோர் கூறுகிறார்கள்.
நாற்பத்தியைந்து வயதான கலாபவன் மணிக்கு நிம்மி என்ற மனைவியும், ஸ்ரீலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.