17-1434511147-rajini-with-sivakarthikeyanடிகர் சிவகார்த்திகேயன் நேற்று முன்தினம், தொலைக்காட்சி ஒன்றில் குஷ்புவிற்கு பேட்டியளித்தார். அப்போது, “நான் ரஜின ரசிகன். அவரை ரொம்ப பிடிக்கும். அவர்தான் என் ரோல் மாடல்” என்று கூறினார். அதோடு, “ரஜினி முருகன்” என்ற படத்தில் ரஜினி ரசிகராக நடித்துக்கொண்டிருக்கிறார்.

இது கமல் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பேஸ்புக், ட்விட்டர் சமூகவலைதளங்களில் சிவகார்த்திகேயனை கடுமையாக விமர்சித்து வந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் சிவந்தி ஆதித்தன் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், நடிகை ஹன்சிகா உள்பட பலர் சென்னையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் வந்தார்கள்.

கமலை வரவேற்க அவரது ரசிகர்கள் மதுரை விமான நிலையத்தில் குழுமி இருந்தார்கள். அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு கமல் சென்றுவிட்டார். அடுத்து சிவகார்த்திகேயன் வெளியே வந்தார். அவர் வருவதை அறிந்த கமல் ரசிகர்கள் சிலர் விமான நிலைய வாசலில் காத்திருந்தனர்.

சிவகார்த்திகேயன் வந்தவுடன் அவரை சூழ்ந்துகொண்டு, “காக்கி சட்டை என்ற எங்கள் தலைவரின் படப்பெயரில் நீயும் நடித்தாய். இப்போது ரஜினி ரசிகன் என்று சொல்லிக்கொள்கிறாயா” என்று ஒருமையில் விவாதம் செய்தார்கள். சிவகார்த்தியேன் கூறிய விளக்கத்தை அவர்கள் ஏற்கவில்லை. ஒருகட்டத்தில் சிலர் சிவகார்த்திகேயனை அடிக்க பாய.. பாதுகாவலர்கள் தடுத்தனர். இதனால் அங்கு தள்ளுமுல்லு ஏற்பட்டது.

1442749902-0612

இந்தக் காட்சியை சிலர் தங்களது செல்போன் கேமராவில் படம் எடுத்து சமூகவலைதளங்களில் பரவவிட.. பரபரப்பு அதிகமானது.

இது குறித்து சென்னை விமான நிலையத்தில் கமல் மற்று சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்தனர். சிவகார்த்திகேயன் கூறுகையில், “எனக்கு எந்த பிரச்னையும் இல்லை, நான் நலமாகத்தான் உள்ளேன்” என்றார்.  ஆனால், தன் மீது தாக்குதல் நடந்தது என்பதை மறுக்கவில்லை.   அதே நேரம், கமல் பற்றி சிவகார்த்திகேயேன் ஏதோ துடுக்குத்தனமாக பேசினார் என்றும், கமல் மகள் ஸ்ருதியை கிண்டலாக கமெண்ட் செய்தார் என்றும் தாக்குதலுக்கு இரு வேறு காரணங்கள் சொல்லப்படுவது பற்றி சிவகார்த்திகேயன் ஏதும் விளக்கம் அளிக்கவில்லை.

கமலோ,  “எனது ரசிகர்கள் சிவகார்த்திகேயனை தாக்கியதாக கூறப்படும் சம்பவம் உண்மை அல்ல. நானும் சிவகார்த்திகேயனும் மதுரையில் நிகழ்ச்சி முடிந்து ஒன்றாகத்தான் வருகிறோம்” என்றார்.

21-1442802649-kamal-sivakarthikeyan4511ஆனால் சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்கள்தாக்கியது உண்மைதான் என்றும், இது குறித்து கல்லூரி விழாவின்போதே கமல் வருத்தம் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது.

மேலும், நேற்று இரவு சிவகார்த்திகேயனை போனில் தொடர்புகொண்ட ரஜினி, “என்ன நடந்தது” என்று விசாரித்து ஆறுதல் கூறியிருக்கிறார் என்றும் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ரசிகர்கர் மன்றமே வேண்டாம்  என்ற முடிவில் இருந்தவர் கமல். ஆனால் ரசிகர்களின் தொடர் வற்புறுத்தலால்,  முதன் முதலாக ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக உருவாக்கி பல பொதுநல நிகழ்ச்சிகளை நடத்தியவர். மேலும், ரசிகர்களுக்காக தரமான மய்யம் என்ற இதழையும் நடத்தியவர்.

கமல் நடித்த விருமாண்டி படத்துக்கு முதலில் சண்டியர் என்று பெயர் வைக்கப்பட்டபோது, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர். கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆவேசப்பட்ட தனது ரசிகர்கள் கமல் அமைதியாக இருங்கள் என்று அடக்கி வைத்தார். அதையும் மீறி, கிருஷ்ணசாமிக்கு எதிராக பேட்டி அளித்த சேலம் மாவட்ட மன்ற பொறுப்பாளரை தனது மன்றத்தில் இருந்தும் நீக்கினார்.

அந்த அளவுக்கு நாகரீகமான கமல், தனது ரசிகர்களையையும் அப்படி நாகரீகமானவர்களாகவே உருவாக்கி வந்தார். இந்த நிலையில்  அவரது ரசிகர்களில் சிலர்  அநாகரீகமாக ஈடுபட்டது திரையுலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை  அளித்துள்ளது.

தவிர முன்பு ஒரு காலத்தில் இருந்தது போல கமல் – ரஜினி ரசிகர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகுமோ என்ற கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.  இதற்கு கட்டியம் கூறுவது போல, சமூகவலைதளங்களில் கமலையும் அவரது ரசிகர்களையும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

இரு நடிகர்களும், தங்கள் ரசிகர்களை சரியான வழியில் நடத்த வேண்டும். ரசிகர்களும், படத்தை ரசிப்பதோடு இருப்பதே புத்திசாலித்தனம் என்பதை உணரவேண்டும்.