டில்லி

லகெங்கும் கொரோனாவால் பெற்றோரை இழந்து 10.42 குழந்தைகள் ஆதரவற்று உள்ளதாக தி லான்செட் பத்திரிகை தெரிவித்துள்ளது.

மாநிலங்களவையில் சமீபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மட்டும் ‘இந்தியாவில் 645 குழந்தைகள், கொரோனாவால் தங்கள் பெற்றோர்களை இழந்துள்ளனர். இவற்றில், உத்தரப் பிரதேசத்தில் 158 குழந்தைகள், ஆந்திரப் பிரதேசத்தில் 119 குழந்தைகள், மகாராஷ்டிராவில் 83 குழந்தைகள், மத்தியப் பிரதேசத்தில் 73 குழந்தைகளும் அடங்குவர். கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் கல்வியைத் தொடர்வதற்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

தி லான்செட் பத்திரிகை தாய் – தந்தையை இழந்த குழந்தைகள் பற்றிய தரவுகளை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.  கொரோனா பாதிப்பால் 21 நாடுகளில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளைக் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின்படி, உலகம் முழுவதும் 10.42 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் தங்கள் தாய் மற்றும் தந்தையை இழந்துள்ளனர் எனத் தெரிகிறது. தந்தை, தாய், மற்றும் பராமரிப்பாளர்களை இழந்து மொத்தம் 11.34 லட்சம் குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

மெக்சிகோ, பெரு, தென்னாப்பிரிக்கா, பிரேசில், கொலம்பியா, ஈரான், அமெரிக்கா, அர்ஜெண்டினா, ரஷ்யா போன்ற நாடுகளில் பெற்றோரை இழந்து அதிக குழந்தைகள் பாதிக்கப்பட்ட்டுள்ளனர். இந்தியாவில் 1,16,263 குழந்தைகள் தங்கள் தாய் மற்றும் தந்தையை இழந்துள்ளனர். தாய், தந்தை, மற்றும் பராமரிப்பாளர்களை இழந்து மொத்தம் 1,19,170 குழந்தைகள் ஆதரவற்றவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில், 25,500 குழந்தைகள் தங்கள் தாயை இழந்துள்ளனர்., 90,751 குழந்தைகள் தங்கள் தந்தையை இழந்துள்ளனர்.