ஆபாச வீடியோ வழக்கில் ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீசார் வாக்குமூலம் பதிவு

Must read

மும்பை:
பாச வீடியோ வழக்கில் ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரியில் பெண்களின் ஆபாச படங்களாக உருவாக்கி அதனை மொபைல் செயலிகள் மூலம் வெளியிட்ட குற்றத்திற்காக ராஜ்குந்த்ரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதாவது மும்பையில் ஆபாச படம் தயாரித்து அதை லண்டனில் அப்லோடு செய்து வந்துள்ளார்கள்.

தொடர்ந்து விசாரணைக்கு பின்னர் இவ்வழக்கின் முக்கிய சதிகாரராக செயல்பட்ட ராஜ்குந்த்ராவை கைது செய்தார்கள். இவ்வழக்கில் அவருக்கு எதிரான போதுமான சான்றுகள் உள்ளதாக கூறப்படுகிறது .

பொது இடங்களில் ஆபாசமான செயல்களில் ஈடுபடுவது மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ராஜ்குந்த்ரா மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. ஆபாச படங்களை எடுப்பதற்காக நடிகர்களை கட்டாயப்படுத்தியது தொடர்பாக மற்றொரு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேற்கண்ட இரு எப்ஐஆர் அடிப்படையில் கடந்த வாரம் ஒன்பது பேரை மும்பை போலீசார் கைது செய்தார்கள் . கைது செய்ப்பட்ட ராஜ் குந்த்ராவை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், ஆபாச வீடியோ வழக்கில் கணவர் ராஜ் குந்த்ரா கைதாகியுள்ள நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டியிடம் மும்பை போலீசார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

More articles

Latest article