வாஷிங்டன்

ஷ்யா –  உக்ரைன் போரில் 7000 முதல் 15000 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.

சுமார் 4 வாரங்களுக்கு முன்பு உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்தது.  இந்த போர் தொடர்ந்து நடந்து வருகிறது.    இந்த  போரில் உக்ரைன் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.    உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களை ரஷ்யா குறி வைத்து தாக்க் வருவதால் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் உயிர் இழந்துள்ளனர்.

ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.    இதனால் ரஷ்ய ராணுவத்தினர் பலரும் உயிர் இழந்துள்ளனர்.  இந்த போரை நிறுத்த இரு தரப்பு மேல்மட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்திய போதும் எவ்வித முடிவும் எட்டாததால் போர் தொடர்ந்து வருகிறது

போரில் இரு தரப்பிலும் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறித்து அவ்வப்போது நேட்டோ அமைப்பு தகவல்கள் வெளியிட்டு வருகிறது.   தற்போது நேட்டோ அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி இந்த போரில் ர்ஷ்ய ராணுவ வீரர்கள் சுமார் 7000 முதல் 15000 பேர் உயிர் இழந்திருக்க வாய்ப்புள்ளதாகத் தெரிய வந்துள்ளது.