emergensy
 
இந்தியாவில் தற்போது காவல்துறை உதவிக்கு 100, மருத்துவ உதவிக்கு 108, மேலும் 101, 102 என பல்வேறு எண்கள் அவசர கால அழைப்புகளுக்காக செயல்பட்டு வருகிறது. ஆனால் அமெரிக்காவில் எந்த ஒரு அவசர அழைப்பாக இருந்தாலும் 911, இங்கிலாந்தில் 999 போன்ற எண்களை அவசர உதவிக்காக செயல்படுத்தி வருகின்றன. எனவே இந்தியாவிலும் தனித்தனியாக காவல், தீ அணைப்பு, மருத்துவம், விபத்து, அவசர கால உதவி போன்றவற்றிற்கு இருப்பதைபற்றி ஒரே எண்ணாக அறிவிக்கலாம் என்று டிராய் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதனிடையே, 112-ஐ தேசிய அவசர எண்ணாக அறிவிக்க வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் தனது அறிக்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் தற்போது 112-ஐ இந்தியாவின் தேசிய அவசர எண்ணாக கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் புதிய அவசர ஹாட்லைன் எண்ணான 112-ல் காவல்துறை(100), தீயணைப்புத்துறை(102), ஆம்புலன்ஸ்(103) மற்றும் அவசர பேரிடர் மேலாண்மை(108) ஆகியவற்றின் எண்களும் சேர்க்கப்படும். போகப் போக அனைத்து அவசர உதவி எண்களும் 112 உடன் ஒருங்கிணைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.