தில்லி விமான நிலையத்தில்  போலி டிக்கெட் மூலம் நுழைந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
delhi airport
போலி இ-டிக்கெட்டுகளை வைத்திருக்கும் மக்கள் தில்லி விமான பாதுகாப்பிற்கு புதிய அச்சுறுத்தல்களாக உருவாகியுள்ளனர். கடந்த 14 மாதங்களில் அவ்வாறு 30 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். புரூசெல்ஸ் பயங்கரவாத தாக்குதல் மற்றும் பல புரளி குண்டு வைப்பு அழைப்புகள் தினசரி வருவதைப் பொருட்டு  இந்திரா காந்தி சர்வதேச விமான நிலைய பாதுகாப்பு அதிகபட்ச எச்சரிக்கையுடன் உள்ளது.
அடையாள ஆவணத்தோடு டிக்கெட்டின் நகலை மட்டும் பயணிகள் நுழைவு வாயில்களில் காட்டினால் போது, டிக்கட்டின் அசல் அங்கு காட்டத் தேவையில்லை. போலி டிக்கெட் வைத்திருந்த பெரும்பாலானோர் விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்படும் போது கைது செய்யப்பட்டனர்.
பாதுகாப்பு படையினரால் நிறுத்தப்பட்ட போது, வெளியே செல்லும் காரணத்தை பலரால் சரிவர கூறமுடியவில்லை. அதற்குப் பின்னர் தான் அவர்களது டிக்கெட் சோதித்ததில், போலி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒரு நபர் அவரது மின் டிக்கெட் மற்றும் ஒரு அடையாள அட்டையை காட்டி விமான நிலையத்திற்குள் நுழைய அனுமதிப்பது ஆபத்தானது என்று அதிகாரிகள் கூறினர். பைகள் கூட மேம்போக்காக மட்டுமே நுழைவு கட்டத்தில் பரிசோதிக்கப்படுகின்றன
நுழைவு வாயிலில் PNR ரீடர் நிறுவுவது அபாயத்தை குறைக்குமெனவும் ஏனெனில்  நுழைவு வாயிலில் பாதுகாப்புச் சோதனை செய்வது சாத்தியம் இல்லை எனவும் விமான நிலைய பாதுகாப்பிற்கு பொறுப்பான மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எப்) அதிகாரி கூறினார்.
“ஒவ்வொரு மின் டிக்கெட்டையும் கைமுறையாக சோதனை செய்வதற்குப் பதிலாக இயந்திரத்தை நுழைவு வாயிலில் நிறுவலாம். வாயிலில் பொறுப்பிலிருக்கும் அதிகாரி பயணிகள்  நுழைவதை அனுமதிக்கும் முன் இயந்திரத்தின் மூலம் டிக்கெட் சரிபார்க்கலாம். இது விமான நிலையத்திற்குள் சட்டவிரோதமாக போலி டிக்கெட் மூலம் யாரும் நுழையாமலிருக்க உறுதி செய்ய முடியும், ” என்று ஒரு மூத்த சிஐஎஸ்எஃப் அதிகாரி கூறினார்.
2015 ஆம் ஆண்டில், 23 பயணிகள் விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும் போது பிடிபட்டனர். இந்த ஆண்டு (பிப்ரவரி 29-ம் தேதி வரை) ஏழு பயணிகள் அகப்பட்டுள்ளனர். 2014 ஆம் ஆண்டில், 16 பேர் போலி இ-டிக்கெட் வைத்திருந்ததாக பிடிபட்டனர்.
“அந்த 30 பேரும் பயங்கரவாதிகள் இல்லயென்பதால் அதிர்ஷ்டசாலியானோம். PNR ரீடர்களை நாம் நிறுவ வேண்டும்,” என்று அதிகாரி கூறினார். “ஸ்ரீநகரில் மட்டும் தான்  பயணிகள் நுழைவு வாயிலில் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். நுழைவு வாயிலில் நாம் ஒரு சீரற்ற பாதுகாப்பு சோதனை நடத்துகிறோம் ஆனால் இப்போது அதை அதிகரிக்கப்போகிறோம்,” என்றும் அந்த அதிகாரி கூறினார்.
delhi airport 3
ஞாயிறன்று ஆறு விமானங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாக ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்ததால் பாதுகாப்பு  அதிகரிக்கப்பட்டது. இந்த வார தொடக்கத்தில், ஐந்து ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மற்றும் 11 இண்டிகோ விமானங்களை இது போல வெடிகுண்டு இருப்பதாக வந்த அழைப்புகளினால்  தரையிறக்கப்பட்டன.
delhi airport 2
“ஜனக்புரியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு ஆறு விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக ஒரு அழைப்பு வந்தது. இதையொட்டி ஹோட்டல் ஊழியர்கள்  உள்ளூர் போலீஸ்க்கு தகவல் கொடுத்தார்கள். அதன்பின் போலீஸ் விமான நிலையத்திற்கு  தகவல் கொடுத்தது. வெடிகுண்டு மிரட்டல் மதிப்பீட்டுக் குழு (BTAC) இதனை “முக்கியத்துவமில்லாத” அழைப்பு என குறிப்பிட்டனர், ” என்று ஒரு விமான அதிகாரி கூறினார்.
delhi airport 4
முந்தையச் சந்தர்ப்பங்களில், குறிப்பிட்ட விமானம் எண்கள் கொடுக்கபட்டதாகவும் ஆனால் இப்பொழுது அழைப்பாளர் சீரற்ற விமான விவரங்கள் கொடுத்ததால் இந்த அழைப்பு ‘முக்கியத்துவமில்லாத’ அழைப்பு என விமான நிலைய வட்டாரங்கள் கூறுகிறார்கள்.