ஆங்கிலம் தெரிந்தால் வேலைபெறும் தகுதி 40% அதிகரிக்கும்
msde-and-dot-sign-an-mou_0c3352b4-fbae-11e5-89a7-e0427befb59eமத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி  ஒருவருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தால் உலக அளவில் அவர் வேலை பெறுதற்கான தகுதி 40 சதவீதம் அதிகரிக்கும் என திறன்மேம்பாடு தொழில்முனைவோர் துறைக்காகன் மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி பேசியதாவது:-  உலக அளவில் ஆங்கிலத்தின் தேவை மிகவும் அவசியம். அப்போதுதான் இந்திய தொழிலாளர்கள் உலகளாவிய  வேலைவாய்ப்பினை பெறமுடியும். எனவே இந்தி மற்றும் சமஸ்கிருதம் தவிர ஆங்கிலத்தின் மீதும் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். அதற்காக ஆங்கில வழியில் பாடத்திட்டங்கள் மாற்றப்ப்ட வேண்டும்.
Learn English card with colorful backgroundஇன்று ஒருவருக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருந்தால் உலக அளவில் அவருடைய வேலை பெறுவதற்கான தகுதி 40% அதிகம்.. நான் ஆங்கில அறிவு பெற்றதினால்தான் மற்ற அமைச்சர்களைவிட என்னை அதிகமாக மாநாடுகளில் உரையாற்ற அழைக்கின்றனர். நான் பீகாரில் பிறந்தவன். 35 ஆண்டுகளாய் அரசியலில் இருப்பவன். நான் கல்லூரியில் அரசியல்துறையில்தான் பட்டம் பெற்றேன். ஆனால் அதனை ஆங்கில வழியில் நான் படிக்கவில்லை. இருந்தும் என் ஆங்கில அறிவை பெருக்கிக் கொண்டேன். அதனால்தான் என் கட்சித் தலைமை எனக்கு இவ்வளவு பொறுப்பையும் பதவியையும் தந்துள்ளது.
நான் கற்ற ஆங்கிலம் போஜ்புரி மற்றும் இந்தி மொழிகள் என் டெல்லி அரசியல் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளன.ஆங்கில மொழியால் நீங்கள் நன்மை அடைகிறீர்கள். திறன் சார்ந்த கல்வியாக ஆங்கில மொழியையும் ஒருங்கிணைத்து பள்ளிகளில் கற்பிக்கத் தவறிவிட்டோம். அதனை நாம் இழந்து விட்டோம். ஆங்கில மொழி கற்றால் நல்ல சம்பளத்தில் உடனடி வேலைவாய்ப்பு உலகம் முழுவதும் கிடைக்க வழி உள்ளது. ஆங்கில அறிவு பெற்றிருப்பது ஒரு கூடுதல் தகுதி. வேலைவாய்ப்பு சந்தையில் நல்ல விலை போவதற்கான கருவியாக ஆங்கிலம் திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.