1

 

சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டதற்கு அமெரிக்கா தனது வருத்தத்தைத் தெரிவித்தது. அமெரிக்க உள்துறை செய்தித்தொடர்பாளர் மார்க் டோனர், “வெள்ள பாதி்ப்பிற்கு உள்ளான சென்னை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளுக்குத் தேவையான நிதியுதவிகளை வழங்க அமெரிக்கா தயாராக உள்ளது. இந்திய அரசுடன் இணைந்து அனைத்து வகையான நிவாரண உதவிகளையும் வழங்க தயாராக இருக்கிறோம்” என்றார்.

நிகழ்ச்சி அழைப்பிதழ்
நிகழ்ச்சி அழைப்பிதழ்

 

அமெரிக்க அரசு போலவே, அமெரிக்கா வாழ் தமிழர்களும், தங்களது தாய்த் தமிழகத்தின் சோகம் போக்க பலவித முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.  குறிப்பாக, தமிழர்கள் அதிகம் வசிக்கும் அட்லாண்டா பகுதியில் வெள்ள நிவாரண நிதிக்காகவே நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இது தொடர்பாக, “எழுக தமிழகம்.. வலிமையான தமிழகம்” என்ற முழக்கத்துடன் கடந்த 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றை அமெரிக்க வாழ் தமிழர்கள் நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், கலந்துகொள்பவர்களுக்கு தங்களது பாடல், ஆடல் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் இதைக் குறிப்பிட்டதோடு, வெளளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, கடலூர், தூத்துக்குடி மக்களுக்கு உதவும்படி கோரிக்கை வைக்கப்பட்டது.

மருந்து, உடைகள், மற்றும் இதர பொருட்கள் அளிக்கும்படியும், பணமாகவும் அளிக்கலாம் என்றும் கோரப்பட்டது.

ப்ளூகிராஸ், பிரதமர் நிவாரண நிதிக்கும் நேரடியாக அளிக்கலாம் என்றும் கூறப்பட்டிருந்தது. .

இதையடுத்து நடந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு, தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தினர். அதோடு  அட்லாண்டா வாழ்  தமிழ் மக்கள் மற்றும் இந்தியா மக்கள் 12 அணிகளாக பிரிந்து கிரிக்கெட் போட்டி நடத்தினர். ஒவ்வொரு அணியும் தலா 600 டாலர் நிதி உதவி அளித்தது.

இதிலிருந்து தமிழ்நாடு மாற்று பாண்டிச்சேரி வெள்ள  நிவரண  நிதிக்கு 10000 டாலர் அனுப்பிவைத்தனர். இந்த நிகழ்ச்சியை அட்லாண்டா கிரிக்கெட் லீக் ஏற்பாடு செய்திறந்து

தவிர இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகமக்களுக்கு ஏராளமான உதவிகளை அளித்தனர்.

 12399170_10153340669018581_142946499_n12404520_10153340669013581_1646316660_n

எத்தனை தொலைவில் இருந்தால் என்ன.. எங்கள் உள்ளம் தாய்த்தமிழகத்தில்தான் இருக்கிறது என்பதை அமெரிக்கவாழ் தமிழர்கள் நிருபித்து நெகிழச் செய்துவிட்டனர்.