108
அதிகாரிகள் தகாத வார்த்தைகளால் பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளான 108 ஆம்புலன்ஸ் ஊர்தி ஓட்டுனர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி. கே.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
கடந்த ஆகஸ்ட் மாதம் அருப்புக்கோட்டையில் இதே போல 108 ஆம்புலன்ஸ் ஊழியர் ஜெயராஜ், அதிகாரிகளின் டார்ச்சர் காரணமாக, விசம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
“ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு 12 மணி நேரம் வேலை நேரமாக உள்ளது. ஊதியம் மாதம் 8500 மட்டுமே வழங்கப்படுகிறது. இவர்கள் சென்னை மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படுகின்றனர்.
மண்டல மேலாளர், மாவட்ட மேலாளர் அதிகாரிகளாக உள்ளனர்.  அதிக வேலைபளு, சம்பளம் குறைவு போன்ற தங்கள் குறகளை மேலதிகாரிகளிடம் தெரிவித்தால், “விருப்பம்  இருந்தால் வேலை பாருங்கள்” என்று கூறி தரக்குறைவாக பேசுகிறார்கள். எத்தனையோ பேரின் உயிரை நாங்கள் காக்கிறோம். ஆனால் எங்களது உயிருக்கு எந்தவித மதிப்பும் இல்லை” என்று புலம்புகிறார்கள் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்.