மத்திய அரசு செய்தது முட்டாள்த்தனமா, அயோக்கியத்தனமா?

Must read

12376379_1004589516266018_8424939135544087706_n
காட்சிப்படுத்தப் படுத்த தடை செய்யப்பட விலங்குகள் பட்டியலில் காளை மாடு உள்ளது. ஒரு அரசாணை மூலம் காளையை அந்த பட்டியலிலிருந்து எடுத்து விட்டதாகவும் எனவே ஜல்லிக்கட்டினை நடத்தலாம் என்றும் மத்திய அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. அவ்வாறு மத்திய அரசு அவசரமாக வெளியிட்ட அரசாணைக்குத்தான் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஆனால் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டதாக மக்கள் பொங்கி வடிந்து கொண்டிருக்கிறார்கள். சிங்கம், புலி, கரடி, யானை போன்ற விலங்குகளை வைத்து எந்த வித performance ம் செய்யக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. ஜல்லிக்கட்டை வேறு எந்த பெயரில்

ஜெயராமன்
ஜெயராமன்

நடத்தினாலும் அது சட்ட விரோதமே. இப்போது குற்றவாளிக் கூண்டில் நிற்பது மத்திய அரசுதான். காட்சிப்படுத்தப் படுத்த தடை செய்யப்பட விலங்குகள் பட்டியலில் காளை மாட்டை சேர்த்த அரசாணையை நீக்கி மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வந்திருந்தால் PETA போன்ற அமைப்புகள் ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு மன்றம் போக முடியாது. மாறாக அரசின் அவசரசட்டத்தை எதிர்த்துதான் வழக்கு போட முடியும்.
அப்படிப்பட்ட வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு இடைக் கால தடை விதிக்க வாய்ப்பு இல்லை. இப்படி ஒரு வெட்டியான அரசாணையை வெளியிட்டால் அதன் கதி என்னவாகுமென்று இவர்களுக்கு தெரியாது என்று கூறு வார்களேயானால் நாங்கள் ஒண்ணும் தெரியாத முண்டங்கள் என்பதையாவது அவர்கள் ஒப்புக் கொள்ளவேண்டும்! “வழக்கு உச்சநீதி மன்றத்தின் விசாரணையில் இருக்கும்போது நாங்கள் அவசர சட்டம் கொண்டுவர முடியாது. நீங்கள் கொண்டு வாருங்கள்” என்று தமிழக அரசுக்கு விஷமத்தனமான யோசனை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

Tp Jayaraman  (முகநூல் பதிவு)

More articles

Latest article