n
(கடந்த அக்டோபர் 31ம் தேதி பிரசுரமான இக் கட்டுரை, திருமலை நாயக்கர் பிறந்தநாளை முன்னிட்டு இன்று மறு பிரசுரம் செய்யப்படுகிறது.)
நாம்தமிழர் ஒருங்கிணைபபாளர் சீமான்,, “ நாயக்கர்கள் தமிழனை ஆண்டார்கள் என்கிற அவமானச் சின்னமாக இருக்கிறது மதுரை நாயக்கர் மகால்” என்று பேசிவருகிறார்.
தஞ்சை ராஜேஷ் தனது தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதில் இருந்து….
“நான் நாயக்கர் சாதியை சேர்ந்தவனல்ல.. எந்த சாதி உணர்வும் இல்லாத தமிழன். . எனக்கு எல்லா சாதி, மதங்களிலும் நல்ல நண்பர்கள் உண்டு.. நான் படித்து அறிந்த வரலாறை பதிவிடுகிறேன்..
முதலில் சரித்திரத்தை பார்போம் நாயக்கர் மன்னர்கள் பதவி ஆசையிலோ சொத்துக்களை கொள்ளையடிக்கவோ இங்கு வரவில்லை…  முகலாயர் மதுரை மீது படையெடுத்தபோது பாண்டிய மன்னரால் அதை சமாளிக்க முடியாமல் அவர் கிருஷ்ணதேவராயரிடம் உதவி கேட்டு தூது அனுப்புகிறார்.  கிருஷ்ணதேவராயரும் நாகமநாயகர் தலைமையில் படையை அனுப்பினார்.
அந்தபடை மதுரை வரும் முன் முஸ்லீம் படைகள் பாண்டிய மன்னரை கொன்று அவரது தலையை மீனாட்சி அம்மன் கோவில் முன்பு குத்தீட்டியில் குத்தி வைத்து விட்டு மதுரையை கைபற்றி விட்டு இங்குள்ள இந்து கோவில்களை அழிக்க துவங்கினர்.  அப்போது வந்த கிருஷ்ணதேவராயரின் படைகள் முஸ்லீம் படைகளோடு போரிட்டு வென்று முஸ்லீம் படை தளபதியின் தலையை வெட்டி மீனாட்சி அம்மன் கோவில் முன்பு குத்தீட்டியில் குத்திவைத்தனர்.
அதன் பின்பு பாண்டிய மன்னர்களின் வாரிசுகள் யாரும் வராததால் நாகமநாயக்கர் தன்னை மதுரை மன்னராக அறிவித்து கொண்டார்.  இதை அறிந்த கிருஷ்ணதேவராயர் நாகமநாயகரை எச்சரித்து நாட்டை பாண்டிய மன்னர்களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பும்படி கூறினார். அதை நாகமநாயக்கர் கேட்காததால் கிருஷ்ணதேவராயர் விசுவநாத நாயக்கர் தலைமையில் மீண்டும் ஒரு பெரும்படையை மதுரைக்கு அனுப்புகிறார்.
விசுவநாத நாயக்கர் வேறு யாரும் அல்ல.. நாகமநாயக்கர் மகன்தான்.  தன் தந்தை என்றும் பாராமல் நாகமநாயக்கரை சிறைப்பிடித்து விஜயநகரத்திற்கு கொண்டு செல்கிறார் விசுவநாதநாயக்கர். நாகமநாயக்கரை சிறைச்சேதம் செய்ய சொன்ன கிருஷ்ணதேவராயர் விசுவநாத நாயக்கரிடம் என்ன பரிசு வேண்டும் என கேட்கிறார். அதற்கு அவர் எனக்கு பரிசு வேண்டாம் என் தந்தையை மன்னித்து விடுதலை செய்யுங்கள் என கேட்கிறார்.  அப்படியே செய்த கிருஷ்ணதேவராயர் மதுரைக்கு முத்துவீரப்ப நாயக்கரை அனுப்பி பாண்டிய மன்னர் வாரிசுகளிடம் ஆட்சியை ஒப்படைக்க ஆணையிடுகிறார்
மதுரை வந்த விசுவநாதநாயக்கர், பாண்டிய மன்னரின் வாரிசுகளை தேடுகிறார். நிறைய பேர்கள் உரிமை கொண்டாடி வருகின்றனர்.  யார் உண்மையான வாரிசு என்று தெரியவில்லை.  என்ன செய்வது அன்று DNA டெஸ்ட் இல்லை.  மேலும் தொடர் போர்களால் நாடு சீரழிந்து  கிடந்தது. மக்கள் பட்டிணியால் வாடினர். அரசு கஜானாவில் ஒன்றும் இல்லை. அரசை நிர்வகிக்கபடைபலமும் இல்லை. இவற்றையேல்லாம் கிருஷ்ணதேவராயரிடம் விசுவநாத நாயக்கர் தெரிவித்தார். சூழ்நிலையை உணர்ந்த கிருஷ்ணதேவராயர் விசுவநாத நாயக்கரை மதுரையை நிர்வகிக்க சொன்னார்.
மேலும் மக்களின் பசியை போக்க விஜயநகரத்தில் இருந்து தானியங்கள் உட்பட பல நிவாரணங்களை அனுப்பினார் இப்படி உதயமானதுதான் நாயக்கர்கள் ஆட்சி விசுவநாதநாயக்கர் பேரன் தான் திருமலைநாயக்கர் நாயக்க மன்னர்கள் யாரையாவது துன்புறித்தியதாகவோ அடிமைபடுத்தியதாகவோ தமிழை அழிக்க முயன்றதாகவோ எனக்கு தெரிந்து தரவுகள் ஏதுமில்லை…
இன்றைய மதுரையின் கட்டமைப்பிலும் கலாச்சாரத்திலும் நாயக்கர் மன்னர்களின் பங்கு பெரிது. இந்து கோவில்கள் தென்தமிழகத்தில் காப்பற்றப்பட்டதில் நாயக்கர் மன்னர்கள்தான் பெரும்பங்கு வகித்துள்ளனர். திருமலைநாயக்கர் மகாலை அடிமைச்சின்னம் என்று கூறுவோர் யாரும் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை அவ்வாறு கூறுவார்களா என தெரியவில்லை.
சுயநலத்திற்காக இளைஞர்களை மூளைச்சலவை செய்து , திசை திருப்பி ஒற்றுமையாக வாழும் மக்களிடையே பிரிவினையை தூண்டி இந்த மண்ணை சுடுகாடாக்க நினைப்பவர்களின் தீய எண்ணத்தை தமிழ் மண்ணில் வாழும் அனைத்து மக்களும் உணர்ந்து செயலாற்ற வேண்டிய அதி முக்கிய காலகட்டத்தில் இருக்கிறோம்…
மத வெறி மிக மோசமானது, அதைவிட சாதி வெறி பலமடங்கு மோசமானது..”
இதே போல துரை மோகனராசுவின்,  பதிவும் ஒரு செய்தியைச் சொல்கிறது.
“நாயக்க மன்னர்களை தெலுங்கர்கள் என்று சொல்லிவருபவர்களுக்கு ஒரு தகவல்.  திருமலை நாயக்கர் மஹாலில் தெலுங்கு கல்வெட்டு கிடையாது. முழுக்க தமிழ் கல்வெட்டுக்கள்தான்.”