patient

 

பெருமழையால் தேங்கிய வெள்ளம் இன்னும் வடியவில்லை. இந்த சூழ்நிலையில் பலவித நோய்கள் நம்மைத் தாக்கும். அதிலும் தற்போது டெங்கு பயம் நம்மை பீடித்திருக்கிறது. இந்த நிலையில் டெங்கு நோய் குறித்து விழுப்புணர்வுக்காக அந் நோய் குறித்து எழுதியிருக்கிறார் ஜி. துரை மோகன ராஜு.

ழைக்காலத்தோட ட்வின் பிரதர் இந்த கொள்ளை நோய்கள் .இதுல இப்ப லேட்டஸ்ட் “டெங்கு”.டெங்குவைப் பற்றி தெரிஞ்ச தகவல்களை விட,தெரியாத தகவல்களை கொஞ்சம் சொல்றேன்….

1.எல்லா கொசுக்களும் டெங்குவைப் பரப்பாது.இதற்கென்றே உருவாக்கப்பட்ட ஏடிஸ் ஏஜிப்ட்டிஸ் மட்டுமே டெங்கு வைரஸ்களைப் பரப்பும்.இந்த ஏடிஸ் ஏஜிப்ட்டிஸ் ங்கறது பெண் கொசு.

2.கொசுக்கள்ல இது என்ன ரகம்ன்னு கண்டுபிடிக்கவே முடியாது.அதுலயும் இது ஆணா-பெண்ணா ங்கறது முடியவே முடியாது.அது நம்ம நாட்ல ரோட்ல எச்சி துப்பாத ஆளைத் தேடுறதுக்குச் சமம்.அதனால பாரபட்சம் பாக்காம எல்லா கொசுக்களையும் போட்டுத் தள்ளுங்க.

3.டெங்கு கொசுக்கள் தேங்கி நிற்கும் தண்ணீரில்,முக்கியமாக நல்ல சுத்தமான தண்ணீரில் மட்டுமே தன் முட்டைகளை இடும்.அதனால எதிலுமே தண்ணீரை சேமிக்க வேண்டாம்.பாத்திரங்களையும் நன்றாக சுரண்டி கழுவுங்க.அப்பத்தான் அந்த முட்டைகள் நாசாமாப்போவும்.

4.அப்படியே விட்டுவிட்டால் அந்த முட்டைகள் ஒரு வருடம் வரையிலும் கூட அப்படியே இருக்கும்.ஆனால் 16 டிகிரிக்கு கீழ் உள்ள வெப்பநிலையில் டெங்கு கொசுக்களின் பாச்சா பலிக்காது.ஆகவே ஏர்கன்டிஷன் ரூம்கள் அல்லது காற்றோட்டமான அறைகளில் டெங்கு கொசுக்கள் வாலாட்டாது.

5.மழைக்காலம் டெங்குவின் காலம் அல்ல.ஆகஸ்ட் டூ அக்டோபர் வரையிலான காலமே டெங்குவின் பொற்காலம்.குளிர் கூடக்கூட டெங்கு கொசுக்களால் செயல்பட முடியாது.

6.டெங்குக் கொசுக்கள் எந்த நேரமும் கடிக்காது.காலை ஆறு டூ எட்டு மாலை ஆறு டூ எட்டு Dawn to Dusk என்பார்களே அது மட்டுமே அதன் கடி நேரம்.டெங்கு கொசுக்கு நைட் டூட்டி கிடையாது.

7.டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசிகள் கிடையாது.ஆறு வகையான தடுப்பூசிகள் இன்னமும் ஆராய்ச்சி நிலையிலேயே தான் உள்ளன.

8.டெங்கு வைரஸ் நோய் தானே,ஒரு முறை வந்தால் மற்ற வைரஸ் நோய்களைப் போல உடலில் ஆன்ட்டிபாடிகள் தானே வந்து விடுமே என்றால் அதுவும் இல்லை.டெங்குவில் D1,D2,D3,D4 என நாலு வைரஸ் உண்டு.இதில் எந்த வைரஸ் அட்டாக்கியதோ அந்த வகையை எதிர்த்து மட்டுமே மனித உடல் ஆன்ட்டிபாடிகளை உருவாக்கும்.

9.டெங்கு வந்தவர்கள் தொட்டாலோ,தொடர்பில் இருந்தாலோ அதனால் மற்றவர்களுக்குப் பரவாது.மனிதன் டூ மனிதனுக்கு தானே டெங்கு பரவாது.டெங்குவைப் பரப்ப கொசுக்கள் கன்டிப்பாகத் தேவை.

10.டெங்குவிற்கு என குறிப்பிட்ட மருந்துகளோ ஆன்ட்டிபயாட்டிக்குகளோ இல்லை.

11.டெங்கு கொசுக்கள் தன் இருப்பிடத்திலிருந்து சுமார் 400 மீட்டர் தூரமும்,15 உயரத்திற்கும் பறக்கும்.எங்க வீடு மல்ட்டி ப்ளோர் அப்பார்ட்மென்டல ஆறாவது மாடி,இங்க கொசு வராதுல்ல ன்னு நினைக்க வேண்டாம்.கொசு லிப்ட்டில் கூட வரும்.

12.டெங்கு அதிபயங்கர டெட்லீயஸ்ட் நோய் அல்ல–அதற்காக சாதாரண நோயுமல்ல.டெங்கு வந்தாலே மரணம் என்ற பதட்டம் தேவையில்லை.கடந்த முறை டெல்லியில் டெங்கு பரவிய போது 10,000 கேஸ்கள் பதிவாகின,அதில் 400 மட்டுமே மரணம்.அதற்குப் பல காரணங்கள்.

13.நிலவேம்பு கசாயம்,பப்பாளி இலை சாறு போன்றவைகள்,டெங்குவால் வெகுவாகப் பாதிக்கப்படும் இரத்தத்தில் பிளேட்லெட்டுக்கள் எண்ணிக்கையை மட்டுமே கூட்டும்.வைரஸைக் கொல்லாது.ஆனாலும் இதைக் குடிங்க.நல்லது.

14.ஊசி மூலம் டெங்குவைப் பரப்ப முடியாது.

15.டெங்கு வைரஸை தன் வயிற்றில் சுமந்து வரும் ஏடிஸ் ஏஜிப்ட்டிஸ் கொசுவை டெங்கு வைரஸ் கொல்லாது.

16.டெங்குவின் அறிகுறிகள் காய்ச்சல்-தலைவலி-உடல் அசதி.இதோடு வயிற்று வலி,வாந்தி வந்தால் உடனே மருத்துவரைப் பார்க்க வேண்டும்.பொதுவாகவே காய்ச்சல் வந்தால் செல்ப் மெடிக்கேஷனை விட டாக்டரைப் பார்ப்பதே நல்லது.ஏனெனில் காய்ச்சல் என்பது நோயல்ல.வேறு ஏதோ ஒரு கிருமியை எதிர்த்து உடலின் லிம்போசைட்டுகள் என்னும் நோய் எதிர்ப்பு படைவீரர்கள் நடத்தும் உக்கிரப் போரின் தாக்கமே காய்ச்சல்.அதனால் டாக்டர் தீர்மானிக்கட்டும்.

தட்ஸால்….!