Tamil_News_large_848946

லக மக்களை அச்சுறுத்தும் நோய்களுள் ஒன்றாக விளங்குகிறது நீரிழிவு நோய் (சர்க்கரை நோய்). இந் நோய் குறித்த விழிப்புணர்வை மக்கள் பெறவேண்டும் என்பதற்காக, உலக நீரிழிவு நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14-ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது.

நம் உடலில் இன்சுலின் சுரப்பது குறையும் பொது ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை கலக்கிறது. அது உடல் ஆரோக்கியத்துக்கு பல வித பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதுவே சர்க்கரை நோயாகும்.

மரபு வழியாக அல்லது உணவுமுறை மூலமாக நீரிழிவு நோய் ஏற்படுகிறது. மன அழுத்தம் காரணமாகவும் இந்நோய் வரலாம் என்று கூறப்படுகிறது.

மாவுச்சத்து அதிகமுள்ள உணவுகளைக் குறைத்து நார்ப்பொருள் அதிகம் நிறைந்துள்ள காய்கறிகளை அதிகமாக சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். கடலை, பயறு, பருப்பு, சோயா போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். .நடை பயிற்சி அவசியம்.

இந்நோய் அண்டாதவர்களும் தினமும் சுமார் அரைமணி நேரம் நடந்தால் சர்க்கரை நோய் வர வாய்ப்பு குறைவு. குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த பரிசோதனை செய்து இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரை அளவை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.

முறையான பயிற்சி, மருத்துவம் மூலமாக இந்நோயை கட்டுக்குள் வைத்து வாழ்நாளெல்லாம் மகிழ்ச்சியுடன் கழிக்கலாம்!

Herbal

இந்த நிலையில் நீரிழிவு நோயாளிகளுக்கு (சுகர்லெஸ்) இனிப்புச் செய்தி ஒன்று சமீபத்தில் வெளியாகி இருக்கிறது.

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த விலை மலிவான, பக்கவிளைவு இல்லாத ஆயுர்வேத மாத்திரைகள் வரப்போகின்றன என்பதுதான் அது!