சர்க்கரை கலந்த குடிபானங்களுக்கு அதிகவரி! உலக சுகாதார நிறுவனம் அறிவுரை

Must read

1d4387cc-4204-4760-bf2a-fe8f272db6a5_S_secvpf
டில்லி:  
ர்க்கரை கலந்த குடிபானங்களைக் குடிப்பதால் சிறுவர்கள் அளவுக்கு மீறி குண்டாகிறார்கள். இது பலவித பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஆகவே இதுபோன்ற குடிபானங்களுக்கு அந்தந்த நாட்டு அரசுகள் கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்று  உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இது குறித்து உலக சுகாதார நிறுவனம்  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “1990 முதல் உலக அளவில் அதிக எடை கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.   ஆப்பிரிக்கா மற்றும்  ஆசியாவில் நான்கு கோடி சிறுவர்களில் பாதிப்பேர்  ஐந்து வயதாவதற்கு முன்னரே அளவுக்கு மீறி  பருமனாகிவிடுகிறார்கள்.  இதற்கு ஆரோக்கியமற்ற மற்றும் சர்க்கரை கலந்த குடிபானங்களை குடிப்பதே முக்கிய காரணம்.  ஆகவே இது போன்ற சர்க்கரை கலந்த பானங்களுக்கு (கோக் பெப்சி போன்று) கூடுதல் வரிகளை அந்தந்த நாட்டு அரசுகள் விதிக்க வேண்டும்” என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், “ தற்போது சிறுவர்கள் வெளியில் விளையாடுவதை தவிர்த்து, இணைய விளையாட்டுக்களில் அதிக நேரம் செலவிடுகிறார்கள். ஆகவே  அவர்களுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாமல் போகிறது. இதுவும் பருமனாவதற்கு முக்கிய காரணம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

More articles

Latest article