நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் அலைபேசியில் வாக்குவாதம் செய்த சட்டக்கல்லூரி மாணவரை, நாம் தமிழர் கட்சியின் தாக்கி மண்டையை உடைத்ததாக தேனி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீமானை கண்டித்து தேனி உட்பட தென்மாவட்டங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. தேனியில், சீமானை கைது செய்ய கோரி, ஆர்ப்பாட்டம் நடந்ததும் பரபரப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் தாக்குதலுக்கு உள்ளான ஜெகதீஷை தொடர்புகொண்டு பேசினோம். தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஷ், இவர் ஆந்திர மாநிலத்தில் சட்டப்படிப்பு படித்துவருகிறார். சாதி அமைப்பு ஒன்றின் ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.
இவரை நேற்று மாலை மணி அளவில், தேனியில் உள்ள இவரது அலுவலகத்துக்குள் பத்துக்கும் மேற்பட்டவர்கள். புகு்ந்து கடுமையாக தாக்கினார்கள். இதனால் தலையில் அடிபட்டு ரத்தம் வழந்தது. இதன் பிறகு தாக்கியவர்கள் சென்றுவிட, ஜெகதீஷ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இனி ஜெகதீஷ் நம்மிடம் பேசியது…
“ஆந்திராவில் சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறேன். விடுமுறையில் ஊருக்கு வந்தேன். இந்த நிலையில் சீமான், தான் நடத்திய திருப்பூர் மாநாட்டில் நாயக்க மன்னர்களை கேவலமாக பேசியதை அறிந்தேன். ஆகவே கடந்த 27ம் தேதி சீமான் அலைபேசி எண்ணுக்கு தொடர்புகொண்டு பேசினேன். நாயக்க மன்னர்கள் குறித்து ஏன் அவதூறாக பேசுகிறீர்கள் என்று கேட்டேன். அவர் அதற்கு கடுமையா பேசினார் கொன்றுவிடுவதாக மிரட்டினார். பிறகு ஆபாச வார்த்தை ஒன்றைச் சொல்லி போனை துண்டித்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை என்து அலுவலகத்துக்குள் நாம் தமிழர் கட்சியினர் பத்துபேர் புகுந்து என் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தினார்கள். என் மண்டை உடை்து ரத்தம் வழிந்தது. பிறகு அந்த குண்டர்கள் ஓடிவிட்டார்கள். அதன் பிறகு என்னை மருத்துமனையில் சேர்த்தார்கள்.
நாம் தமிழர் கட்சியின் போடி நாயக்கனூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அறிவழகன், என் உடன்பிறவா சகோதரர்தான். சீமானிடம் பேசியபோது கூட இதைச் சொன்னேன். ஆனால் என்னை ஆள்வைத்து கொல்ல முய்சி செய்துவிட்டார் சீமான்” என்றார் ஜெகதீஷ்.
இந்த நிலையில், ஜெகதீஷை தாக்கிய நாம் தமிழர் கட்சியினரையும், அவர்களை தூண்டிவிட்ட சீமானையும் கைது செய்ய வேண்டும் என்று கோரி தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடந்துவருகிறது. சீமானை கண்டித்து பல பகுதிகளில் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கின்றன.

இந்த விவகாரம் குறித்து சீமான் கருத்தை அறிய அவரை தொடர்புகொண்டோம். அவரது அலைபேசி எண்கள் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கின்றன. விரைவில் அவரது கருத்தை அறிந்து பிரசுரிப்போம்.
சீமானுடன் ஜெகதீஷ் பேசியதாக வாட்ஸ் அப்பில் ஆடியோ பரவி வருகிறது. அதே போல் சீமானுடன் தொலைபேசியில் சிலர் வாக்குவாதம் செய்தது என்பதாக பல ஆடியோக்கள் பரவி வருகின்றன. அந்த உரையாடல்களில் ஆபாச பேச்சுக்கள் சகிக்க முடியாத அளவுக்கு இருக்கின்றன.
ஆகவே, சீமான் – ஜெகதீஷ் உரையாடல் என வாட்ஸ்அப்பில் பரவி வரும் ஆடியோ மட்டும் கீழே: