கனவு காணும் ஸ்டாலின்!: கிண்டலடிக்கும் அழகிரி!

Must read

dmk-news

சென்னை:

கருத்து கணிப்பு மூலம் சிலபேர் கனவு காண்கிறார்கள் என்று  தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை மறைமுகமாக விமர்சித்திருக்கிறார் மு.க. அழகிரி.

சமீபத்தில் லயோலா கல்லூரியின் மக்கள் ஆதரவு மையம்,  கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. இந்த  கருத்துக் கணிப்பில், அதிமுகவுக்கு 34.1% பேரும், தி.மு.க.வுக்கு 32.6% பேரும் ஆதரவளித்திருப்பதாக சொல்லப்பட்டிருந்தது.

அதே போல அடுத்த முதல்வராகும் வாய்ப்பு யாருக்கு என்பதில் ஜெயலலிதா முதலிடத்தையும், ஸ்டாலின் இரண்டாவது இடத்தையும், கருணாநிதி மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளதாக  கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், திமு.க.வின்  தென்மண்டல செயலாளராக இருந்து நீக்கப்பட்டவருமான  அழகிரி சென்னை விமான நிலையத்திற்கு இன்று வந்தார். அவரிடம் கருத்து கணிப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டார்கள். அதற்கு அழகிரி,  “தி.மு.க. என்றால் அது கருணாநிதிதான். அவரை தவிர வேறு யாரும் இல்லை. கருத்து கணிப்புகள் மூலம் சிலர் கனவு காண்கிறார்கள்” என்று மறைமுகமாக மு.க.ஸ்டாலினை கிண்டலடித்தார்.

 

.

More articles

1 COMMENT

Latest article