rr

சென்னை:

தமிழக சட்டசபை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற  காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி மற்றும் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ அண்ணாதுரை ஆகியோரரை போது போலீசார் தடுத்ததில் இரும்புக்குழாய் தாக்கி இருவரும் காயமடைந்தார்கள்.

சட்டசபையில் இன்று குடிநீர் பிரச்சினை மீதான கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அமைச்சர் வேலுமணி பதில் அளித்தார்.  அப்போது மார்க்சிஸ்டு மற்றும் இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர்கள்  எழுந்து மத்திய அரசுக்கு எதிரான துண்டு காகிதங்களை காண்பித்தனர். அதில் மத்திய அரசே விவசாயிகளின் மானியங்களை வெட்டாதே என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், பா.ம.க. உறுப்பினர்கள் ஆகியோரும் எழுந்து பேச முயற்சித்தார்கள். நாடு தழுவிய அளவில் நடைபெறும் வேலை நிறுத்தத்தை ஆதரித்து தீர்மானம் கொண்டு வர வலியுறுத்தினார்கள்.

ஆனால் சபாநாயகர் பேச அனுமதி தரவில்லை. அதோடு, மத்திய அரசை கண்டித்து வாசகங்கள் காட்டியதற்காக உறுப்பினர்கள் நடந்து கொள்வது விதிமுறைகளுக்கு மாறானது. இதுமுறையல்ல என்று எச்சரிக்கையும் விடுத்தார்.

உடனே கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், பா.ம.க. எம்.எல்.ஏ.க்கள்  மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி  வெளிநடப்பு செய்தார்கள்.  தலைமை செயலக வெளிவாசல் வழியாக மெயின் ரோட்டுக்கு மறியலில் ஈடுபட  சென்றனர்.

இதனையடுத்து அங்கிருந்த காவல்துறையினர் தடுப்பு கம்பிகளை வைத்து அவர்களை மெயின் ரோட்டுக்கு செல்ல விடாமல் தடுத்தார்கள். வாகனங்களை நிறுத்த உபயோகப்படுத்தப்படும் இரும்பு குழாயையும் கயிறு மூலம் வேகமாக இறக்கினார்கள்.

இந்த கம்பிகள்  காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி, கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. அண்ணாதுரை ஆகியோர் தலையில் இடித்தன.  இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

செய்தியாளர்களிடம் பேசிய சவுந்தர்ராஜன்  ” போலீசார் அராஜக போக்குடன் நடந்து கொண்டனர்.  இதில் நான் உள்பட சில எம்.எல்.ஏ.க்கள் காயம் அடைந்தோம் என்றார்.

விஜயதரணியும், எங்கள் தலையில் காயம் ஏற்பட்டதற்கு காரணமான போலீசார் யார்? அவருக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தது யார்? என்றுவாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரது கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் போலீஸ் அதிகாரிகள்  அமைதியாக  இருந்தார்கள்.

பிறகு விஜயதரணி, ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

எம்.எல்.ஏக்களக்கு காயம் ஏற்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.