கடற்கரையில் ஒதுங்கிய 100 தமிங்கிலங்கள்!

Must read

tuticorin-whales_650x400_51452575316
தூத்துக்குடி :
திருச்செந்தூர் கடல் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியது  கடல் மாசு காரணமாக இவை கரை ஒதுங்கியிருக்கலாம் என சுற்றுச்சுழல் ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
திருச்செந்தூர் அருகே ஆழந்தழை கடல் பகுதியில் நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. கல்லாமொழி , சுனாமி குடியிருப்பு , மணப்பாடு 20 கி மீட்டர் தொலைவு வரை திமிங்கலங்கள் கரை ஒதுங்கியபடி இருந்தன.  அரிய வகை கடல் உயிரினாயன திமிங்கிலம் இப்படி கரை ஒதுங்கியிருப்பது சுற்றுச்சூழல் ஆர்வர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.  கடல் மாசு காரணமாக இவை ஒதுங்கியிருக்கலாம் என்று  அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில், மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். .இவற்றை கடலுக்குள் கொண்டு செல்ல மீன்வள துறை மற்றும் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
“இவை கரை ஒதுங்குவது அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும். ஆகவே இவற்றை ஆழமான கடல் பகுதிக்குள் கொண்டு விட வேண்டும்” என்று சுற்றுப்புறச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

More articles

Latest article