images (25)
வேலூர்: யானைகளால், ஆயிரக்கணக்கானஏக்கர் விளைநிலங்கள்பாதிக்கப்பட்டுள்ளதால், நாற்பது கிராமமக்கள், வரும் சட்டசபை தேர்தலைபுறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம், பேர்ணாம்பட்டு,ஆம்பூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி ஆகியபகுதிகளில், தமிழக-ஆந்திரா மாநிலஎல்லையையொட்டி, நூற்றுக்கும் மேற்பட்டகிராமங்கள் உள்ளன. இங்கு  வனப்பகுதியை ஒட்டி விவசாய நிலங்கள் உள்ளன.
 
ஆந்திரா மாநிலத்தில் இருந்து வரும் காட்டுயானைகள், விளை நிலங்களில் புகுந்து,பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இதனால்  கடுமையாக கடுமையான பாதிப்புக்கு உள்ளான நாற்பது கிராமங்களைச் சேர்ந்த மக்கள் , வரும்சட்டசபை தேர்தலை புறக்கணிக்க முடிவுசெய்துள்ளார்கள்.
யானைகளால் பாதிக்கப்படும்விவசாயிகளின் சங்கத் தலைவர் கணபதிதலைமையில் நிர்வாகிகள், வேலூர் மாவட்டகலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
“ தமிழக-ஆந்திரா மாநில எல்லையையொட்டிஉள்ள பகுதிகளில், காட்டு யானைகள் புகுந்துநெல், தென்னை, வாழை பயிர்களை நாசம்செய்து வருகின்றன.  இதனால் வருடத்துக்கு எங்களுக்கு ஐந்து  கோடி ரூபாய் மதிப்பில்இழப்பு  ஏற்படுகிறது. யானைகளைநிரந்தரமாக காட்டுக்குள் விரட்டியடிக்கவனத்துறையினர் நடவடிக்கை எடுப்பது இல்லை. யானைகளால் சேதமானபயிர்களுக்கும், யானைகள் தாக்கி இறந்தகால்நடைகளுக்கும் உரிய இழப்பீடும் தருவதில்லை.
 
இதனால் கொத்தூர், திண்ணக் கொட்டாய்,பலமனேர், சொரகொளத்தூர், மேல் கொம்பு,மஞ்சு விரட்டி, ஏலகிரி, வேப்பங்குப்பம்,கரடிக்குடி, காட்டேரி, விண்ணமங்கலம்,பெரியாங்குப்பம், உம்மராபாத், ஜாபராபாத்,நரிசம்மம்பேட்டை, தாதா குப்பம்,புளியம்கண்ணு உட்பட, நாற்பது கிராமமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம். இங்கே இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருக்கிறோம்.  நாங்கள், வரும்சட்டசபை தேர்தலை புறக்கணிக்க முடிவுசெய்துள்ளோம்” என்று கூறப்பட்டுள்ளது.